2010

புத்தாண்டு வாழ்த்துகள்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குட நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். [நன்றி: ஆண்டாள்]

சர்ச்சைக்குள் ஒரு சவாரி

2010ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொற்கள் மூன்று. ஸ்பெக்ட்ரம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆ. இராசா.

ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் கோடி என்கிற எண் இதன்மூலம் இந்திய சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. நீரா ராடியா என்று தொடங்கி ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் என்பது வரை இது தொடர்பான துணைக் கதாபாத்திரங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள், வழக்குகள், ஆவேசப் பேச்சுகள், ஆர்ப்பாட்டங்கள் என்று தேசமே அமர்க்களப்பட்டது. பேசாமல் விடுமுறை அறிவித்திருக்கலாம் என்று நினைக்குமளவுக்கு நாடாளுமன்றம் முற்றிலுமாக இயங்காமல் போனது.

நாடாளுமன்றத்தில்தான் பேச முடியவில்லையே தவிர நாடு முழுதும் இதே பேச்சுத்தான். ஆனால் யாருக்கு என்ன புரிந்தது என்பது பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது. ஆ. ராசா ஏதோ மிகப்பெரிய ஊழல் செய்துவிட்டார். வரலாறு காணாத தொகை. மாட்டுத்தீவன ஊழலோ, சவப்பெட்டி ஊழலோ, சொத்துக்குவிப்பு வழக்கோ இத்தனை பெரிய தொகையைச் சுமந்ததில்லை. இது பெரிது. மிகப்பெரிது. ஒன்றேமுக்கால் லட்சம் கோடி. ஆனால் எதில் ஊழல்? எப்படி ஊழல்?

ஸ்பெக்ட்ரம் என்பது ஏதோ ஒரு நிறுவனம் போலிருக்கிறது. போஃபர்ஸ் என்பது பீரங்கித் தயாரிப்பு நிறுவனத்தின் பெயராக இருப்பது போல. இல்லையா? வேறு? என்னவோ பங்கீட்டுப் பிரச்னை என்றல்லவா சொல்கிறார்கள்? நதி நீர்ப் பங்கீடு, நிலப் பங்கீடு போலவா? உரிமை? லைசென்ஸ்? ம்ஹும். ஒன்றும் புரியவில்லை. பேப்பரில் என்ன போட்டிருக்கிறார்கள், பார்ப்போம்.

நாளிதழ்கள் பக்கம் பக்கமாக எழுதின. வார இதழ்கள் வண்ணவண்ணமாக எழுதின. ஆ. இராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல். ஒண்ணே முக்கால் லட்சம் கோடி. ஆராசாவே, பதவி விலகு. எல்லா டெலிபோன் பேச்சுகளும் கேட்டாகிவிட்டது. இனி விவரிக்க ஒன்றுமில்லை. ஊழல் மன்னன் ஒழிக.Read More »சர்ச்சைக்குள் ஒரு சவாரி

சாமியார்களின் ஏஜெண்டுகளைச் சமாளிப்பது எப்படி?

நீங்கள் சில புத்தகங்களை வாங்கவேண்டும் என்று குறித்துவைத்துக்கொண்டு புத்தகக் கண்காட்சிக்குச் செல்கிறீர்கள். எந்தப் புத்தகம், எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். ஒரு பிரச்னையும் இல்லை. போனோமா, வாங்கினோமா, வந்தோமா என்று வேலையை முடிப்பது எளிது; இரண்டு மணிநேரத்தில் திரும்பிவிடுவேன் என்று வீட்டில் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருக்கிறீர்கள். ஆனாலும் அரை நாள், ஒருநாள் ஆகிவிடுகிறது. அப்படியும் தேடிய புத்தகங்கள் பல கிடைக்கவில்லை.

நேர்ந்திருக்கிறதா இல்லையா? எனக்கு நேர்ந்திருக்கிறது. இப்போதல்ல. பல வருடங்களுக்கு முன்னர்; ஒவ்வொரு வருடமும்.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் கல்யாண குணங்கள் பரிச்சயமான பிறகு நமக்கு வேண்டியதை சிரமமில்லாமல் பெறுவதற்கான எளிய வழிகள் என்று சிலவற்றை எனக்கு நானே உருவாக்கிக்கொண்டேன். புத்தக ஆர்வம் கொண்ட மற்றவர்களுக்கும் இது பயன்படலாம் என்பதால் என் வழிகளை இங்கே தருகிறேன்.Read More »சாமியார்களின் ஏஜெண்டுகளைச் சமாளிப்பது எப்படி?

லிங்கு சாமி!

ஒருவழியாக, இப்போது வரப்போகிற புதிய புத்தகங்களுக்கு என்னெச்செம் தளத்தில் லிங்க் போட்டுவிட்டாற்போலிருக்கிறது. நல்லவர்கள் நீடுவாழ்க. என்னுடைய இந்தாண்டுப் புத்தகங்களை என்.எச்.எம். தளத்தில் பார்வையிடவும் வாங்கவும் கீழ்க்கண்ட சுட்டிகள் உதவும். 1. ஆர்.எஸ்.எஸ் – மதம் மதம் மற்றும் மதம் 2. காஷ்மீர்: அரசியல்-ஆயுத வரலாறு 3. அலகிலா விளையாட்டு 4. கொசு 5. உணவின் வரலாறு… Read More »லிங்கு சாமி!

பாவி, பழுவேட்டரையா! குறுக்கே வராதே!

ஊரில் யாருக்காவது கல்யாணமானால், காலக்ரமத்தில் ஒரு குழந்தை எதிர்பார்க்கலாம், நியாயம். தாலி கட்டி முடித்துவிட்டு நேரே போய் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து க்ளியோபாட்ராவின் வாழ்க்கை வரலாறை எழுதுகிற ஜென்மத்தை அறிவீர்களா?

சென்ற வருடம் கிளுகிளு ராஜாக்களின் ஜிலுஜிலு வாழ்க்கையை எழுதி புத்தகக் கண்காட்சியைக் கலக்கிய முகில் இந்த வருடம் தருவது கிளியோபாட்ரா.

எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவாணி என்கிற அற்புதமான இலக்கிய நயம் மிக்க பாடலின் மூலம் கிளியோபாட்ராவைத் தமிழ் மகாஜனங்கள் ஏற்கெனவே ஓரளவு அறிந்திருப்பார்கள் என்றாலும் அந்த கழுதைப்பால் கனவுக்கன்னியின் காலமும் இடமும் இருப்பும், அரசியலில் ஒரு பெண் வெளிப்படுத்திய ஆளுமையும் இன்னபிறவும் இந்தளவு முழுமையாக வேறு எந்த நூலிலும் திரைப்படப் பாடல்களிலும் சினிமாக்களிலும் மற்றவற்றிலும் வெளிப்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

புத்தகம் அருமையாக வந்திருப்பது பற்றி முகிலின் புதிய மனைவிக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. ஓர் எழுத்தாளனைக் கல்யாணம் பண்ணிக்கொள்வதன்மூலம் அனுபவிக்கவேண்டிய நியாயமான இம்சைகளை அவர் திருமணமான முதல் மாதத்திலேயே அனுபவிக்க நேர்ந்தமைக்காக என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன் 😉Read More »பாவி, பழுவேட்டரையா! குறுக்கே வராதே!