ஒன்று சுயபுத்தி வேண்டும் இல்லையென்றால் சொல் புத்தியாவது வேண்டும், இரண்டுமே இல்லாமல் , நதியில் குளிக்கையில் சிறுநீர் கழித்தற்காக தையல் போடும் அளவு முட்டிக் கொள்வது, அவனை ‘மானங்கெட்டவன்’ என வேறு மொழியில் திட்டியதற்கு பாரத் மாதாக்கி ஜெய் என கூச்சலிடுவது போன்ற முட்டாள்தனங்களைக் வெளிகாட்டிக் கொண்டே இருந்தால் சாகரிகா என்ன தான் செய்வாள்! (சமகால அரசியலையும் நாசூக்காய் உள்ளே நுழைத்து விடுகிறார் எழுத்தாளர்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 15)
சாகரிகாவை சந்திக்க செல்லும் சூனியன் அவளை எப்படியாவது கோவிந்தசாமியுடன் சேர்த்து வைத்துவிட வேண்டும் என நினைக்கிறான். சூனியனுக்கு அவள் மீது இச்சை இருப்பதை அவன் உணரும் இந்த அத்தியாயம் ஒரு முக்கியமான திருப்பமாக இருக்கலாம். சூனியர் உலகின் கருத்தரித்தல் நிகழ்வை அவன் விவரிக்கும் விதம் அருமை. சாகரிகா கோவிந்தசாமியிடம் ஒருமுறைகூட உறவு கொண்டதில்லை என்பதை அவன் அறிகிறான். ஆனால் கோவிந்தசாமியின் மூளைக்குள்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 14)
சூனியன் பா.ரா.வின் மீது கடுங்கோபத்தில் இருக்கிறான். தான் ஒரு நேர்க்கோட்டுப் பாதையில் கதையை கொண்டுசென்று இருக்கையில் இந்தாள் வேறு குறுக்கே புகுந்து குட்டையைக் குழப்புகிறானே என கொதிக்கிறான். பா.ரா. கோரக்கரின் ஆள் என்பதால் அவரை அவனுக்கு இயல்பாய் பிடிக்காமல் போனது நியாயம்தான். அதற்காக தன்னையே படைத்தவனை தாறுமாறாய் பேசுவது என்ன நியாயம்? உண்மையில் கோவிந்தசாமியின் மீது அவனுக்கு இருந்த கோபம் பா.ரா.வின்...
அபாயகரம் – ஒரு மதிப்புரை (விவேக் பாரதி)
‘அன்பின் பாராவுக்கு,’ நாடறிந்த (நாட்டை அறிந்த, நாடு அறிந்த) எழுத்தாளர் பாராவுக்கு அனேகமாக வரும் கடிதங்கள் எல்லாம் இப்படித்தான் தொடங்கும். அதனால் நானும் அப்படியே தலைப்பிட்டேன். சற்று வித்தியாசமான இந்த நூல்நோக்கம் 2 நூல்களைப் படித்துக்கொண்டு வந்து முன்னால் போடுகிறது. இரண்டுக்குமான கைகள், பாராவுடையது. தீவிர இலக்கியவாதி, இலக்கியத் தீவிரவாதி, நாவல் உலகின் நாவல்பழம் உள்ளிட்ட பல அடைமொழிகளால்...
யதி – துறவின் அறியாத பக்கங்கள் (ஜார்ஜ் ஜோசப்)
ஒரு வாரமாக யதி நாவலில் மூழ்கியிருந்தேன். சன்னியாசிகள் குறித்து ஆயிரம் பக்கங்கள். சலிப்பே தராமல் அழைத்துச் சொல்கிறது எழுத்து. நாவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளும், ஒருவர் பின் ஒருவராக சந்நியாசி ஆகிவிடுகின்றனர். அவர்களைப் அப்பாதையில் செலுத்தியது என்ன? என்கிற முடிச்சை இறுதியில் தான் அவிழ்க்கிறார் பாரா. ஆனால், முன்பே அது எப்படி அவிழும் என்று கோடிட்டு காட்டிவிடுகிறார். முடிந்தால்...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 15)
மனிதர்கள் வெவ்வேறு வழிகளில் உருவாகின்றனர். மனிதர்களில் சிலர் காமத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு புணர்கின்றனர். சிலர் காமத்தில் மீக்கூர்ந்த அன்பையும் காதலையும் இணைத்துப் புணர்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரும் ஒவ்வொரு வகையில் புணர்கின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் கிடைக்கும் அன்பான அல்லது அன்பற்ற இணையைப் பொறுத்துதான் புணர்தலின் தன்மையும் வேறுபடும். இந்தச் சூனியர்களின் வாழ்வில் இதெற்கெல்லாம் இடமில்லை...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 14)
சூனியனுக்கு அவனுடைய பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்படி வலம் வந்து கொண்டிருக்கும் பாராவின் மேல் கோபம் கொப்பளிக்கிறது. பாராவைத் தேடிப் பிடித்து இரண்டாகக் கிழித்தெறிய விரும்புகிறான். சூனியன் யார் என்பதை முழுவதுமாக அறிந்து கொள்ளாமல் நட்பு கொள்ளும் கோவிந்தசாமியின் நிழல் மீது சூனியனுக்கு நகைப்புத் தோன்றுகிறது. சூனியன் தங்களுக்கும் மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளையும்...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 13)
கோவிந்தசாமி நீலநகரத்தின் குடிமகனான பின்னர் அவனது சிந்திக்கும் திறன் மேம்பட்டு இருப்பதாக நான் உணர்கிறேன். இதுவரை பிறர் நிழலின் அறிவுரையைத் தனக்குள் செலுத்தி, செயல்பட்டு வந்தவன் தன் சிந்தனைக்கும் செவி சாய்த்து செயல்படத் தொடங்குகியுள்ளான். தன்னை விட்டு ஷில்பா சென்று விட்டாள் என்பதை உணர்ந்ததும் வெண்பலகை தன்னை ஏற்க என்ன செய்ய வேண்டும் என எண்ணி, அதற்காகச் செயல்படுகிறான். நீல நகரத்தில் வாழ்பவர்களுக்கு...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 12)
சாகரிகாவின் தோழியாக இருந்தாலும் ஷில்பா கோவிந்தசாமிக்கு உதவ முற்படுகிறாள். அவனை நீல நகருக்குக் குடிமகனாக்க உதவுகிறாள். ஷில்பாவின் உதவியுடன் அவன் அந்த நகரின் குடிமகனாகிறான். அந்த நகரத்தில் எளிதாகக் குடியுரிமையைப் பெற முடியும் என்பதால், அவனுக்குக் குடியுரிமை கிடைத்து விடுகிறது. குடியுரிமை பெறுவதற்கு வழக்கப்படி நடைபெறுவது தற்செயலாக மிகுதியாகிவிடுகிறது. அந்த மிகுதி ஷில்பாவைப் போல் நமக்கும் சற்றுக்...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 11)
உண்மைக்குப் புறம்பான செய்திகளை வலம் வரச் செய்வதும் விஷமிகளின் வேலையாகும். சமூக ஊடகங்களில் தற்பொழுதெல்லாம் இதுதான் நடக்கிறது. அதனால்தான் உண்மைக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இவைபோன்ற அவதூறுகளை வாசிக்கும் பலர் என்ன, எதுவென்று ஆராயாமல் இவற்றை உண்மை என எண்ணி அவற்றின் பின் செல்கின்றனர். அதுபோல் அவனது உறுப்பைப் பற்றி வெண்பலகையில் வெளியிடுவது பழிவாங்குதலின் உச்சம். அதன் பின் வெண்பலகையில் சூனியனும் நிழலும்...