ஒருவன் தான் சைக்கோ என்று கூறப்படுவதைக் கூட ஏற்றுக் கொள்கிறான். ஆனால், சங்கி என்று அழைக்கப்படுவதை அவ்வளவு வேகமாய் மறுக்கிறான். சங்கி என்பதை வசைச்சொல்லாக பயன்படுத்தாதே என்று கூறியவனே தன்னை இப்போது சங்கி என்றவுடன் மறுக்கிறான் என்றால் அறிவுத் தெளிவு பெற்று விட்டானோ? ஆனாலும் செம தில்லான ஆளுயா நீரு. நான் முதல்ல பிரம்மன், சிவன், விந்து அது இதுனு புராண ஆபாசத்தையெல்லாம் தொடர்புபடுத்தி சொல்ற அந்த ஊர் எதுவா...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 8)
உணர்ச்சிவசப்படுபவர்கள் உணரவும் மாட்டார்கள். உணர்த்தவும் மாட்டார்கள். இந்தக் கோவிந்தசாமியும் இவ்வாறுதான். குரங்கு கிளைகளை இறுகப் பற்றி விளையாடியும் தாவியும் கொண்டிருப்பதுபோல, அவளை மனத்தளவிலும் புத்தியிலும் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறான் கோவிந்தசாமி. ஒருவரைப் பிறர் எளிதாக மாற்ற இயலாது. ‘தான் மாற வேண்டும்’ என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே மாறுவர். கோவிந்தசாமி அவளைத் தான் விரும்பம் அரசியல் இயக்கத்தின்...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 7)
சாகரிகா கோவிந்தசாமியின் மீது அன்பில்லாதவள். உண்மை அன்பை உணரத் தெரியாதவள். கணவன் மீது வெறுப்பை மட்டுமே செலுத்தியவள். முற்போக்குச் சிந்தனையுடையவள் என்று நாம் எண்ணிய வேளையில் இல்லை, அவன் மீது அன்பு செலுத்தினாள் என்பதை இந்த அத்தியாயத்தின் வழி அறிய முடிகிறது. அவளுக்கு அவனது தெளிவான சிந்தனையற்ற கொள்கையின் மீதும் தன்னை உணரத் தெரியாத உணர்வின் மீதும் வெறுப்புக்கொண்டு, தனக்கு ஏற்ற துணை அவன் அல்லன் என்று...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 8)
கடற்கரையில் நடக்கும் மாநாட்டு விவரணக்குறிப்புகள் மிகச் சிறப்பு. வழக்கமாகவே உலகம்முழுக்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மாநாடுகள் இவ்வாறுதான் நடைபெறுகின்றன. இந்த அத்யாயத்தில் ‘தேசிய நீரோட்டம்’ என்ற சொல் எழுத்தாளரால் மிகப் பெருத்தமாகக் கையாளப்பட்டுள்ளது. தன் முன்னாள் கணவரைப் பற்றி எழுதப்படும் கட்டுரைத்தொடரில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளும் வஞ்சம் நிறைந்தவை. வஞ்சத்திலிருந்தே தன்னுடைய முன்னாள் கணவரின்...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 7)
நீலநகரத்தின் நியதிகள் அனைத்தும் புதுமையாகவே இருக்கின்றன. அவையனைத்திலும் எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்களின் புதுமைச்சிந்தனை இழையோடியுள்ளது. நீல நகரத்தில் ரகசியங்களே இல்லை என்பதும் அங்கு நிலவும் மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு நிமிடமே ஆகும் என்பதும் வியப்புக்குரியதாக உள்ளன. ஒவ்வொருவரும் தங்களின் கருத்தை எழுதியே தெரிவிப்பதும் வெண்ணிறப்பலகையில் எழுதும் அனைத்தும் ஊருக்கே தெரியும் என்பதும் அருமையான...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 6)
நீல நகரத்தின் வர்ணனை மிக அருமை. வழக்கமான மிகுபுனைவு கதைகளில் இந்த உலகில் உள்ளனவற்றுக்குத் தலைகீழாகவே பிறிதொரு உலகம் இருக்கும் என்றுதான் காட்டப்பட்டிருக்கும். ஆனால், எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்களின் மிகுபுனைவு கதையான இதில் இந்த உலகில் உள்ளனவற்றுக்குப் புதுமையானவை மட்டுமே பிறிதொரு உலகமான நீல நகரம் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. சான்று – பின்தலையில் ஒற்றைக்கண். குளிர்க்கண்ணாடி அணிந்து அதை...
கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 9)
விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் ஒரு செயலை அவர்கள் செயவதுண்டு. அதாவது, தங்கள் தொலைக்காட்சியின் மற்றொரு சீரியலையோ அல்லது நிகழ்ச்சியையோ அவர்களே கிண்டலடித்துக் கொளவது. ஏனோ நமக்கு அது அத்தனை சுவாரசியமாய் தோன்றும். இந்த அத்தியாயத்திலும் பா.ரா. அதே பாணியையேக் கையாள்கிறார். இதில் கடைசியாக ஒரு கேள்வி வேறு. சூனியன் குறிப்பிடும் அந்த பா.ரா. வும் எழுத்தாளர் பா.ரா.வும் ஒருவரேவா என. சந்தேகமென்ன...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 6)
நீலநகரத்தின் அமைப்பைப் பற்றிக் கூறும் பொழுது எனக்குப் பள்ளிக்கூடத்தில் படித்த வரலாற்று இடங்கள், அதன் கட்டட அமைப்புகள் ஆகியன நினைவுக்கு வந்தன. ஒன்றுடன் ஒன்றை இணைத்துப் பார்ப்பது மனித .இயல்புதானே!. அதைத்தான் நானும் இந்த அத்தியாயத்தில் நானு செய்தேன். என்னைப் போலத்தான் சூனியன் அவனுடைய இருப்பிடத்தையும் நீலநகரத்தின் இருப்பிடத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறான். தன் இருப்பிடத்தைப் பற்றிப்...
கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 8)
நதியில் குளிக்கும் போது சிறுநீர் கழித்து விட்டதற்காக தையல் போடும் அளவிற்கு பாறையில் முட்டிக் கொண்ட கோமாளியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? விளங்காத இந்தியில் “மானங்கெட்டவன்” என்று தன் தலைவன் திட்டினாலும் அதனை உணராது பாரத் மாதா கி ஜே என்று முழங்கும் தேஷ் பகதனைத் தெரியுமா உங்களுக்கு? அது வேறு யாருமல்ல. நம் கோவிந்தசாமி தான். ஆங்….. இப்போது தான் நினைவிற்கு வருகிறது. தசாவதாரம்...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 5)
‘மனம்’ கூறுகெட்டது. நாம் எவர் மீது மீக்கூர்ந்த அன்பைச் செலுத்துகிறோமோ அவர் நம்மைச் செயல்வழியும் சொல்வழியும் புறக்கணித்தாலும்கூட, ‘அவருடைய மொழியையும் அன்பினையும் திரும்பப் பெற்றுவிட மாட்டோமா?’ என்று அலைந்து திரியும் இந்தக் கூறுகெட்ட மனம். சாகரிகா நீல நகரத்திற்குச் சென்று விட்ட பின்னர் அவளைத் தன்னிடமிருந்து பிரித்தெறிய மனமில்லாமல் அவளைத் தேடி அலைகிறான் கோவிந்தசாமி. அவன் மனதும் கூறுகெட்டதுதான்...