Categoryஅனுபவம்

க்ளப்கள்

பேராச்சி கண்ணன் எழுதிய தல புராணம் என்ற புத்தகத்தைப் படிக்க எடுத்தேன். மிகவும் சுவாரசியமாகப் போகிறது. அதில் அடையாறு க்ளப் குறித்த கட்டுரையைப் படித்தபோது சென்னை நகரத்தில் உள்ள க்ளப்கள் சில நினைவுக்கு வந்தன. சென்னையில் சில க்ளப்கள் இருக்கின்றன. தி. நகர் க்ளப், எஸ்.வி.எஸ் க்ளப், காஸ்மோபாலிடன் க்ளப், ரேஸ் கோர்ஸ் க்ளப் என்பது போல. போரூர் போகிற வழியில் லெ மிக்கல் என்றொரு க்ளப் இருக்கிறது. நான் கிண்டி...

புத்தாண்டுத் தீர்மானங்கள்

பொதுவாக நிறையப் பேர் செய்வதும், பெரும்பாலும் யாரும் கடைப்பிடிக்க முடியாமல் கைவிடுவதுமாக ஒவ்வோர் ஆண்டும் நகைப்புக்கு இடமாவது, புத்தாண்டுத் தீர்மானங்கள். தீர்மானங்களைச் செயல்படுத்த முடியாமல் போவதற்கு முக்கியமான காரணம், குறிப்பிட்ட செயலைச் செய்வதற்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோமா, இல்லையா என்கிற தெளிவின்மையே. ஆரம்பித்துவிடலாம்; பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலையிலேயே பல தீர்மானங்களைச்...

பின் கதைச் சுருக்கம் மறு பதிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பின் கதைச் சுருக்கம்’ மறு பதிப்பு ஜீரோ டிகிரியில் வெளியாகியுள்ளது. நாவல்களைப் பற்றிய கட்டுரைகளெல்லாம் வாரப் பத்திரிகையில் வெளியாகுமென்று யாரும் கற்பனைகூடச் செய்ய முடியாத காலக் கட்டத்தில் இக்கட்டுரைகள் கல்கியில் வெளியாயின. (வருடம் மறந்துவிட்டது. குறைந்தது 20 ஆண்டுகளுக்கு முன்னர்.) அப்போது நான் மிகவும் ரசித்த, ஏதோ வகையில் என்னை பாதித்த நாவல்களைக் குறித்தும்...

கலவர காலக் குறிப்புகள் – மறு பதிப்பு

  என்னுடைய அரசியல் புத்தகங்களில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இதுதான். இரண்டு காரணங்கள். அதிகம் பரிச்சயமில்லாத தேசங்களின் அரசியலை / பெரும் பிரச்னைகளை மிகக் குறைவான சொற்களில் புரிய வைக்க வேண்டும் என்று எனக்கு நானே விதித்துக்கொண்டு, எந்தக் கட்டுரையும் 500 சொற்களுக்கு மிகாதவாறு பார்த்துக்கொண்டேன். சுருக்கம் தருகிற வேகத்துக்கு நிகரே கிடையாது. இரண்டாவது காரணம், இந்தப்...

Bukpet-WriteRoom: எழுத்துப் பயிற்சி வகுப்புகள்

விநாயகரை வணங்கி, இதனை இன்று அறிவிக்கிறேன். Bukpet-WriteRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகளை முறைப்படித் தொடங்குகிறேன். இன்று மாலை இந்திய நேரம் 6.15க்கு என் நண்பர்கள் ராஜேஷ் கர்கா, பெனாத்தல் சுரேஷ், தினேஷ் ஜெயபாலன் இவர்களுடன் என் மகள் பாரதியும் இணைந்து சமூக வெளியில் இதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்வார்கள். தொடக்கமாக, எட்டு வகுப்புகளுக்கான விவரங்களும் அறிவிப்புகளும் இன்று வெளியாகும். இன்னும் சில...

படைப்பாளி எனும் பேசுபொருள் – கோபி சரபோஜி

வாசிக்க வாங்குனவனுக ஆட்டயப் போட்டுட்டு போயிட்டானுகன்னு புலம்பாமல் முதன் முதலில் வந்த பதிப்பு நுல்கள் தற்போதைய விலையை விட குறைவாக இருக்கும். அவைகளைத் தேடிப் பார்த்து வேண்டிய நூல்களை வாங்கிக் கொள்.பணம் நான் தருகிறேன்” என நண்பர் சொல்லியிருந்தார். கரும்பு தின்னக்கூலியா? என்றாலும் ஏண்டா இந்த உறுதி மொழியைக் கொடுத்தோம்? என அவன் நினைத்து விடவும் கூடாது என்பதால் பார்த்து விட்டு சொல்கிறேன் என சொல்லி...

எழுத்துக் கல்வி

புத்தகங்கள் வாங்க

வலை எழுத்து

தொகுப்பு

வகை

RSS Feeds

படைப்புகளை மின்னஞ்சலில் பெற


நூலகம்

மின்னஞ்சல்

para@bukpet.com