பா.ராகவன் தினமணி டாட்காமில் எழுதிய யதி நாவலை முழுவதும் வாசித்தேன். இதற்குமுன் அவர் எழுதிய பலவற்றை வாசித்திருந்தாலும் யதி தந்தது வேறு விதமான அனுபவம். யதி, துறவொழுக்கம் அல்லது ஒழுக்க மீறலைக் கருவாகக் கொண்டது. யோகிகள், சித்தர்கள், ஞானிகள் முதல் சாதாரண சன்னியாசிகள்வரை பலபேர் நாவலில் வந்தாலும் அவர்களின் தோற்றத்துக்கு அப்பால் உள்ளதைத் தோண்டி எடுப்பதே நோக்கம் என்பது தொடக்கத்திலேயே புரிந்துவிடுகிறது. ஒரு...
யதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]
குழந்தைப் பருவம் முதல் சாமியார் என்றதும் என் நினைவில் வருபவர், எங்கள் ஊர் (புதுகை) அதிஷ்டானம் சாந்தானந்த ஸ்வாமிகள். சிரித்த முகம். யாரைக் கண்டாலும் ஆசீர்வதிக்கும் பெருங்கருணை. பிறகு வயது ஏற ஏற காஞ்சி மகா பெரியவரின் துறவொழுக்கம் கண்டு தாள் பணிந்தேன். பின்னாளில் விதவிதமாக எவ்வளவோ சன்னியாசிகள் எங்கெங்கிருந்தோ முளைத்தார்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் பல்வேறு விதமான செய்திகள், தகவல்கள், பரபரப்புகள்...
யதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு
யதி ஜனவரி சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகிறது. புத்தக வடிவில் சுமார் ஆயிரம் பக்கங்கள். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ‘பினாக்கிள் புக்ஸ்’ இதனை வெளியிடுகிறது. செம்பதிப்பு | ராயல் சைஸ் | விலை ரூ. 1000 டிசம்பர் 30-ம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலை. ரூ.700 மட்டும். முன் வெளியீடு தொடர்பாக பினாக்கிள் புக்ஸ் அறிவித்துள்ள விவரம் கீழே. முன்பதிவு செய்ய...
யதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]
பா. ராகவனின் யதி அவரது முந்தைய படைப்புகளில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றது. சகோதரர்களான நான்கு சன்னியாசிகளின் கதையை ஒற்றை நபரின் மீள் நினைவாகச் சொல்லும் பாவனையில் இந்திய சன்னியாச மரபினை, அதன் பிரிவுகளை, காவி உடுத்தினாலும் உள்ளத்தின் அலைக்கழிப்பில் பறக்கும் சிந்தனையின் திசைகளை, எச்சங்களின் வலைப்பின்னல்களில் சிக்கித் தவிக்கும் துறவு மனங்களை எட்டிப் பிடிக்கின்றது. இந்த விதத்தில் சன்னியாசிகளின்...
யதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]
இடைநிறுத்தம், நிறுத்தம், வரையறை, கட்டுப்பாடு, வழிகாட்டுதல், அடிக்கடி, பக்தன், அழிப்பவர், புனிதமான, தீவிரமான, தேடுபவர், துறவி, one who has controlled his passions and abandoned the world என்றெல்லாம் பொதுவாக யதி என்னும் வார்த்தை விளக்கப்பட்டாலும் இவையெல்லாம் ஆண்பாலையே குறிக்கின்றது. ஆனால் பாராவின் யதியைப் படித்தபின்பு, இந்த யதி இப்புனைவில் நடமாடும் நான்கு சகோதரர்கள், இவர்களின் அப்பா...
யதி – வாசகர் பார்வை 15 [துளசி கோபால்]
அன்புள்ள அனியன் பா.ராகவனுக்கு, யதி வாசித்தேன். ஐந்துநாள் தொடர் வாசிப்பு. அதன் பின் மூன்று நாட்கள் ஆச்சு அதிலிருந்து மீண்டுவர! இதுவரை உங்கள் எழுத்துகளை அங்கொன்றும், இங்கொன்றுமா வாசிச்சிருக்கேனே தவிர , ஒரு முழுத் தொடரா வாசிக்க வாய்ப்பே கிடைக்கலை. யதி வாசகர் கடிதங்கள் பார்த்துட்டுத்தான் அப்படி என்ன இருக்குன்னு உள்ளே போனேன். போனேனா….. அவ்ளோதான். அப்படியே உள்ளே இழுத்துப் போயிருச்சு...
யதி – வாசகர் பார்வை 14 [தர்ஷனா கார்த்திகேயன்]
மனம் என்ற ஒன்றை விட அதி பிரம்மாண்டமான ஒரு விஷயம் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்க முடியுமா என்ற கேள்வி தான் யதி படித்து முடித்த பின்பு எனக்குள் தோன்றியது. துறத்தல் இத்துணை எளிதானதா? அல்லது இயல்பானதா? சாதாரண இலௌகீக வாழ்வின் அனைத்து இன்ப துன்பங்களையும் அனுபவித்துக்கொண்டும், தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்ற ஏதோ ஒன்றைக் குறிவைத்து இடையறாது ஓடிக்கொண்டும் இருக்கும் சராசரி மனிதர்களுக்கு சந்நியாசத்தின் மீது...
யதி – வாசகர் பார்வை 13 [சிவராமன்]
அது 2010 ம் வருடம். துபாயில் ஹாஸ்பிடாலிடி-கட்டுமான நிறுவனமொன்றில் வேலையிலிருந்தபோது, ஸ்வீடனிலிருந்து ஒரு பொறியாளரை இணைய மேம்பாட்டுப் பயிற்சிக்காக தருவித்திருந்தது எங்கள் நிறுவனம். “கெவின் பிஸ்மார்க்” என்ற அந்த ஐரோப்பியரை அறிமுகப்படுத்தியபோது அவரது நெற்றியிலிருந்த திருநீற்றுப்பட்டை ஆச்சர்யப்படுத்தியது. பெரும்பாலும் மேற்கிலிருந்து வருபவர்களுக்கு ஹிந்து ஆன்மிக ஆர்வமென்றால் அது...
யதி – வாசகர் பார்வை 12 [டாக்டர் ஆர். திருநாவுக்கரசு]
நாவலின் கரு ஒரு ஆசாரமான அய்யங்கார் குடும்பத்தில் பிறந்த நான்கு பிள்ளைகளைப் பற்றியது. ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைத் தேடி, பெற்ற தாய் தந்தையைத் தவிக்கவிட்டு குடும்பத்தில் இருந்து விலகுகிறார்கள். பெரியவன் விஜய் பற்றிய நிகழ்வோடு ஆரம்பிக்கிறது நாவல். அவன் தம்பிக்கு தரும் அதிர்ச்சியான அனுபவங்கள். அடுத்தடுத்து ஒவ்வொருவருக்கும் நடக்கும் வினோதமான அனுபவங்கள்- Paranormal நிகழ்வுகள். சொரிமுத்து, சர்புதீன் என சில...
யதி – வாசகர் பார்வை 11 [காஞ்சி ரகுராம்]
அடேய் கிராதகா! உன் யதியைப் படிக்க, மூச்சுப் பயிற்சியெல்லாம் செய்ய வேண்டுமா? இதயம் அதிகமாய்ப் படபடத்தது. சமயத்தில் சில துடிப்புகள் சில நொடிகளுக்கு நின்று மீண்டன. படித்து முடித்த போது புயல் தாண்டவமாடிக் கடந்த நிலமாய் என் மனம். நிசப்தத்தில் செவி. வானை வெறித்தபடி விழிகள். இன்னும் சில நாட்களுக்கு யதிலிருந்து மீள முடியாது என்று நினைக்கிறேன். இது வீட்டை விட்டு விலகி துறவு பூண்ட நான்கு சகோதரர்களின் கதை...