Categoryயதி

யதி – வாசகர் பார்வை 14 [தர்ஷனா கார்த்திகேயன்]

மனம் என்ற ஒன்றை விட அதி பிரம்மாண்டமான ஒரு விஷயம் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்க முடியுமா என்ற கேள்வி தான் யதி படித்து முடித்த பின்பு எனக்குள் தோன்றியது. துறத்தல் இத்துணை எளிதானதா? அல்லது இயல்பானதா? சாதாரண இலௌகீக வாழ்வின் அனைத்து இன்ப துன்பங்களையும் அனுபவித்துக்கொண்டும், தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்ற ஏதோ ஒன்றைக் குறிவைத்து இடையறாது ஓடிக்கொண்டும் இருக்கும் சராசரி மனிதர்களுக்கு சந்நியாசத்தின் மீது...

யதி – வாசகர் பார்வை 13 [சிவராமன்]

அது 2010 ம் வருடம். துபாயில் ஹாஸ்பிடாலிடி-கட்டுமான நிறுவனமொன்றில் வேலையிலிருந்தபோது, ஸ்வீடனிலிருந்து ஒரு பொறியாளரை இணைய மேம்பாட்டுப் பயிற்சிக்காக தருவித்திருந்தது எங்கள் நிறுவனம். “கெவின் பிஸ்மார்க்” என்ற அந்த ஐரோப்பியரை அறிமுகப்படுத்தியபோது அவரது நெற்றியிலிருந்த திருநீற்றுப்பட்டை ஆச்சர்யப்படுத்தியது. பெரும்பாலும் மேற்கிலிருந்து வருபவர்களுக்கு ஹிந்து ஆன்மிக ஆர்வமென்றால் அது...

யதி – வாசகர் பார்வை 12 [டாக்டர் ஆர். திருநாவுக்கரசு]

நாவலின் கரு ஒரு ஆசாரமான அய்யங்கார் குடும்பத்தில் பிறந்த நான்கு பிள்ளைகளைப் பற்றியது. ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைத் தேடி, பெற்ற தாய் தந்தையைத் தவிக்கவிட்டு குடும்பத்தில் இருந்து விலகுகிறார்கள். பெரியவன் விஜய் பற்றிய நிகழ்வோடு ஆரம்பிக்கிறது நாவல். அவன் தம்பிக்கு தரும் அதிர்ச்சியான அனுபவங்கள். அடுத்தடுத்து ஒவ்வொருவருக்கும் நடக்கும் வினோதமான அனுபவங்கள்- Paranormal நிகழ்வுகள். சொரிமுத்து, சர்புதீன் என சில...

யதி – வாசகர் பார்வை 11 [காஞ்சி ரகுராம்]

அடேய் கிராதகா! உன் யதியைப் படிக்க, மூச்சுப் பயிற்சியெல்லாம் செய்ய வேண்டுமா? இதயம் அதிகமாய்ப் படபடத்தது. சமயத்தில் சில துடிப்புகள் சில நொடிகளுக்கு நின்று மீண்டன. படித்து முடித்த போது புயல் தாண்டவமாடிக் கடந்த நிலமாய் என் மனம். நிசப்தத்தில் செவி. வானை வெறித்தபடி விழிகள். இன்னும் சில நாட்களுக்கு யதிலிருந்து மீள முடியாது என்று நினைக்கிறேன். இது வீட்டை விட்டு விலகி துறவு பூண்ட நான்கு சகோதரர்களின் கதை...

யதி – வாசகர் பார்வை 10 [முருகு தமிழ் அறிவன்]

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் கிழக்கிலிருந்து விலகுகிறேன் என்று பாரா அறிவித்த நேரத்தில் அதைப் பற்றி விசனப்பட்ட அவரது வாசகர்களில் நானும் ஒருவன். நேர்த்தியான கதைசொல்லியும், சமூகத்திற்குத் தேவையான சிந்தனைகளையும் அனுபவங்களையும் சொல்லும் வல்லமை கொண்டவரும் மொழியாளுனருமான எந்த ஒரு எழுத்தாளர் அவ்வாறு அறிவித்தாலும் வாசகப் புலத்தில் சலசலப்பும், விசனமும் ஏற்படுவது இயல்பு; அவ்வாறு விலகி, ஓரிரு மாதங்களில்...

யதி – வாசகர் பார்வை 9 [ரஞ்சனி பாசு]

நாம் அனைவரும் இப்பூவுலகில் பயணிகளே.. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நிகழும் பயணம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. ஒரே இலக்கை அடைவதற்கு அவரவருக்கான வழித்தடம் வேறு.. ஒரே பாதையில் பயணித்தாலும், அவரவர் இலக்குகள் வேறு.. ஆனாலும் எல்லோரும் பயணப்பட வேண்டும். ஒருவரின் பயண அனுபவம் போல் பிறிதொன்று இல்லை என்ற பிரத்யேகத் தனித்தன்மை தான் மனித வாழ்வின் சுவாரஸ்யம். யதி யை வாசிக்க தூண்டியதே –துறவறம் எனும்...

யதி – வாசகர் பார்வை 8 [டாக்டர் வாசுதேவன்]

பாராவின் யதியை ஆரம்பத்தில் இருந்து படித்து வந்தேன். கொஞ்சம் ஆன்மிக நாட்டம் இருந்ததால், இது பத்தி என்ன எழுதப்போகிறார் என்று ஒரு ஆவல் இருந்தது. நிறைய விஷயங்கள் புதிதாகத் தெரியவந்தன. ஆரம்ப காலத்தில ட்விட்டர்ல இவர் போட்ட லிங்கை தேடிப்போய் தினமணி இணைய பதிப்பில் படிச்சு ஆஹா, ஓஹோ, அப்பறம் போன்ற கருத்தாழமிக்க கமெண்ட்ஸ் போட்டுக்கொண்டு இருந்தேன். அப்பறம் கதை உள்ள இழுத்து, கமெண்ட் போடுவதை நிறுத்திட்டேன்...

யதி – வாசகர் பார்வை 7 [ஜானகி கிருஷ்ணன்]

முதலில் அம்மா பாத்திரம் ரொம்பப் பாவமாக இருந்தது.   “நான் உன் போட்டோவை வச்சுப்பேன்” ன்னு சொன்ன  கடைக் குட்டி செல்லப் பையன் எங்கிருந்தோ போன் பண்ணி   “நான் இனி உனக்கு இல்லை – நீ சாக மாட்டே”ந்னு சொன்ன பொழுது  எனக்கு வருத்தமாக இருந்தது.  குழந்தைகளுக்கு பார்த்துப் பார்த்துச் செய்த தாய்மார்களுக்குத் தெரியும் அது எவ்வளவு கஷ்டம்னு.  என் சினேகிதி ஒருமுறை என்னிடம் மகன் மிகவும் கடுமையாகத் தன்னிடம் பேசுவதாகச்...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me