சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு வழியாக முடிந்தது. வழக்கத்தைவிட அதிக மக்கள் கூட்டம், அதிக விற்பனை, அதிக சுவாரசியங்கள். பதினோறாம் தேதியே இதனை எழுதாததன் காரணம், உடம்புக்கு முடியாமல் போய்விட்டதுதான். கண்காட்சி சமயம் என்னவாவது படுத்தல் ஏற்படுவதென்பது என் ராசி. சென்ற வருடம் மாதிரி கால் கட்டு போட்டுக்கொண்டு வீட்டோடு முடங்கிவிடாமல் இம்முறை பத்து நாளும் செல்ல முடிந்தது பெரிய விஷயம் என்று...
மாவோயிஸ்ட்: நூல் அறிமுகம்
இந்த வருடம் நான் எழுத நினைத்த, எழுதிக்கொண்டிருந்த அனைத்துப் புத்தகங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, என்னைச் செலுத்தி, தன்னை எழுதிக்கொண்ட புத்தகம் மாவோயிஸ்ட். சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியாகிறது. இன்றைய தேதியில் இந்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குபவர்கள் அவர்கள். இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள். ஆனால், பரவலாக வெளியே...
ஒரு தீவிரவாத செயல்திட்டம்
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்தது. வீட்டில் ஒரு விசேஷம். வருகிற விருந்தினர்களுக்கு வெற்றிலை பாக்குடன் என்ன வைத்துக்கொடுக்கலாம் என்று பேச்சு வந்தது. என் அப்பாவை சந்தோஷப்படுத்த முடிவு செய்து, நான் ஓர் அறிவிப்பு செய்தேன். எத்தனை பேர் வந்தாலும் சரி. வெற்றிலை பாக்குடன் என் அப்பா எழுதிய திருக்குறள் உரை புத்தகத்தை அவர்களுக்கு அன்பளிப்பாகத் தருவது. செலவும் பொறுப்பும் என்னுடையது. அப்பாவுக்கு...
சென்னை புத்தகக் காட்சி 2010- விவரங்கள்
* 33வது சென்னை புத்தகக் காட்சி, எதிர்வரும் டிசம்பர் 30ம் தேதி, புதன் கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. இடம்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானம் – பச்சையப்பன் கல்லூரி எதிரே, சேத்துப்பட்டு, சென்னை 30. * பபாசி அமைப்பின் புதிய தலைவர் சேது சொக்கலிங்கம் [கவிதா பதிப்பகம்] வரவேற்புரை ஆற்ற, வழக்கம்போல் நல்லி குப்புசாமி செட்டியார் நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கிறார். * தமிழக...
வரைபடம்
சென்னை புத்தகக் காட்சி டிசம்பர் 30ம் தேதி சேத்துப்பட்டு செயிண்ட் ஜான்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்குகிறது. கண்காட்சியில் New Horizon Media நிறுவனத்தின் புத்தகங்கள் கிடைக்கும் அரங்க எண்களை மேலுள்ள வரைபடம் சுட்டுகிறது. கிழக்கு நூல்கள் P1 அரங்கில் கிடைக்கும். நலம் வெளியீடுகள் அரங்கு எண் 455-456ல் கிடைக்கும். கிழக்கு வெளியிட்டுள்ள இலக்கிய நூல்கள் விருட்சம் அரங்கில் [அரங்கு...
இடைவேளைக்குப் பிறகு
புத்தாண்டு என்பது புத்தகக் கண்காட்சி தொடங்கும்போது தொடங்குவது. எனவே இவ்வாண்டின் புத்தாண்டுத் தினம் டிசம்பர் 30. ஓயாத வேலைகளால் கடந்த சில மாதங்களால் இந்தப் பக்கங்களில் எதுவும் எழுதுவதற்கான வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதுவும் ஒரு வேலை என்று கொள்ள அவ்வப்போது விரும்புவதுண்டு. இதுவரை முடிந்ததில்லை. பார்க்கலாம், புத்தாண்டு முதலாவது. இந்த வருடம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக புத்தகங்கள், புதிய...
சென்னை புத்தகக் காட்சி 09 – நாள் 2
ம்ஹும். மக்களுக்கு இன்னும் விஷயமே தெரியவில்லை போலிருக்கிறது. இரண்டாம் நாளுக்குரிய வழக்கமான கூட்டத்தில் பேர்பாதிக்கும் குறைவு. நேற்றைய பதிவில் நான் குறையாகச் சொல்லியிருந்த இரண்டு விஷயங்கள் மீது இன்றைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. டாய்லெட்டில் நாற்றமில்லை, கண்காட்சி அரங்க வளாகத்தின் நுழைவாயில் அருகே ஒரு குடிதண்ணீர் கேன். நிச்சயமாக பபாசி அமைப்பாளர்கள் வலைப்பதிவு வாசித்திருக்க வாய்ப்பில்லை...
புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது…
(இந்தியாவில்) தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு ஒன்று காவல்துறையிடமிருந்து புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்துக்கு (பபாஸி) வந்துள்ளது. பபாஸி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சென்னை புத்தகக் கண்காட்சியில், கிழக்கு பதிப்பகம் அரங்கில் கீழ்க்கண்ட புத்தகங்கள் இப்போதைக்கு விற்பனைக்குக் கிடைக்கா:...