Notice: Undefined index: 00 in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Notice: Undefined index: 00 in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Notice: Undefined index: 00 in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321
0 | Page 4 of 14 | Pa Raghavan
Notice: Undefined index: 00 in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Notice: Undefined index: 00 in /home/writerpara/webapps/writerpara/wp-includes/class-wp-locale.php on line 321

Archive2009

திரையும் கதையும்

சிறந்த திரைக்கதைகள் என்று கமலஹாசன் அளித்த பட்டியலொன்றை பாஸ்டன் பாலாஜி வெளியிட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வி இங்கொரு குறிப்பு எழுதியிருக்கிறார். இதனை வைத்துக்கொண்டு விவாதிப்பதைவிட, ஒவ்வொருவரும் தமக்குச் சிறந்ததெனத் தோன்றும் திரைக்கதைகளைப் பற்றிப் பேசுவது பலன் தரும். எந்தத் தனிநபரின் ரசனையும் உலகப்பொதுவாக இயலாது. அனைவருக்கும் உண்டு, வேண்டுதல் வேண்டாமை. சினிமாவை, பொழுதுபோக்காக அல்லாமல் தீவிரமாக...

சிறுகதைப் பயிலரங்கம் – சில குறிப்புகள்

உரையாடல் அமைப்பின் சிறுகதைப் பயிலரங்கில் நேற்று கலந்துகொண்டேன். தமிழ்நாட்டில் சிறுகதை பயில நூறு பேர் பணம் கட்டி வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பது வியப்பல்ல; மகிழ்ச்சி. சில வருடங்களுக்கு முன்னர் தமிழோவியத்தில் புனைகதைகளின் எதிர்காலம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கதைகளில் இருந்து கதையல்லாத எழுத்தை நோக்கி நகர்வது பரிணாம வளர்ச்சி என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். கொஞ்சம் தீவிரமான சர்ச்சைகளை...

நினைக்காத நாளில்லை

என்றும் நினைக்க வேண்டும். இன்றாவது நினைக்கலாம். மகாகவி பாரதி நினைவு தினம் இன்று [செப் 11].
எனவே இன்றொருநாள் குறுங்குடிலில் என் வெண்பாம் இம்சைகள் இருக்காது.

பாம்புப் பிரச்னை

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவெனப் பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடுற்ற வீக்கம் கலங்குவதெவரைக் கண்டால் அவர் என்பர் கைவில்லேந்தி இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக் கிறுதி யாவார். கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் வருகிற ஒரு பாடல் இது. எளிமையாக இதற்கு அர்த்தம் சொல்லவேண்டுமென்றால் இவ்வாறு சொல்லலாம்: ஒரு பூமாலையைப் பார்த்தால் சட்டென்று பாம்பு போல் தோன்றிவிடுகிறது. அதே மாதிரிதான்...

அஞ்சலி

இங்கு லிங்க் கொடுத்த ஐபிஎன் லைவ் வீடியோ வேலை செய்யவில்லை. இனி அது வேலை செய்தும் உபயோகமில்லை. ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தார் என்று சற்றுமுன் செய்தி வந்திருக்கிறது. அவரோடு பயணம் செய்த நால்வரும் உயிர் இழந்திருக்கிறார்கள். மோசமான விபத்து. கர்னூலுக்கு எழுபது கிலோமீட்டர் தொலைவில் ருத்ரகுண்டா மலைப்பகுதியில் நிகழ்ந்திருக்கிறது. நேற்று காலை தொடங்கி ஒரு...

ஒருவர் பலி

என் வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் வருகிற ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குள், நடுச்சாலையில் நான்கு இடங்களில் ‘ஒருவர் பலி’ என்று மஞ்சள் பெயிண்டில் எழுதியிருக்கிறார்கள். வெறுமனே எழுதியிருந்தாலும் சரி. மேலே கீழே எலும்புக்கூடு பொம்மையெல்லாம் போட்டு சுற்றிலும் ஓர் அபாய வட்டம் வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் விபத்து நடந்தது, நீ வண்டி ஓட்டும்போது கவனம் என்று எச்சரிக்கும் நோக்கம்தான். ஆனால்...

ஆண்டாளுக்கு வந்த சோதனை

எனது முந்தைய பதிவுக்குத் தமிழ் இந்து தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் ஒரு நீண்ட எதிர்வினை ஆற்றியிருப்பதை இப்போதுதான் கண்டேன். அரவிந்தனுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். நான் சாதாரணமாக எழுதிய கட்டுரையில் ஆண்டாள் தன்னிஷ்டத்துக்குத் தானாக வந்து விழ, மனிதர் ரிக் வேதம் தொடங்கி சூஃபி வரை உலகளந்து, இறுதியில் அந்தப் பத்து பைசா பெறாத கட்டுரைக்கு ஏதோ அரசியல் உள்நோக்கம் வேறு இருப்பதாகச் சொல்லிவிட்டார்...

F5 உங்கள் சாய்ஸ்

பன்னெடுங்காலமாக சுப்புடுவின் தலைப்புப்பட்டை என்னை வசீகரித்து வந்தது. இந்த மனிதர் என்ன செய்திருக்கிறார் என்று மிகவும் யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பக்கத்தைப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும்போதும் ஒவ்வொரு தலைப்புப்படம் வரும். புதிதாகக் கிறுக்கும். அழகு. ஆனால் எப்போதும்போல் எனது அரிச்சுவடித் தொழில்நுட்ப அறிவு எதையும் உணரவிடாமல் அடித்து வந்தது. கணேஷிடம் சொல்லலாம்தான். எழுதுவதைத் தவிர மற்ற...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter