‘நான் ஒரு பெரிய மேக்கர் சார்! முதல் படம் சரியா அமையாததுக்குப் பல காரணங்கள். இப்ப என்னை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. நீங்க எழுதுங்க. நான் எப்படி எடுக்கறேன்னு பாருங்க.’ அவருடைய தன்னம்பிக்கைதான் முதலில் என்னைக் கவர்ந்தது. நெற்றி நிறைய குங்குமம், விபூதி, சந்தனம், மணிக்கட்டில் கனமாக, மந்திரித்த சிவப்புக் கயிறு, மூச்சுக்கு மூச்சு சிவநாமம். சினிமாவைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால் மட்டும்...
கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்
முடிந்தது
பிரபாகரனையும் தனி ஈழம் என்னும் கனவையும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று விட்டார்கள். இதன்மூலம் 1983ம் ஆண்டு முதல் இடைவிடாது நடந்துவந்த இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் இறுதியாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் தமிழர்களுக்கு இதனைக் காட்டிலும் மாபெரும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் இன்னொன்று இருக்கப்போவதில்லை. ஓயாத யுத்தமும் தீராத ரத்தமுமாக வருடங்கள்...
இந்தியத் தேர்தல் 2009 – தமிழகம் என்ன சொல்கிறது?
* இன்று காலை வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்தே திமுக பெற்று வந்த முன்னணி நிலவரங்கள், பொதுவில் நிலவிய அதிருப்தி மனநிலைக்கு எதிரான முடிவு வரப்போகிறது என்பதைச் சுட்டிக்காட்டியது. * நாற்பது தொகுதிகளுக்கும் முடிவுகள் வந்துவிட்ட நிலையில் திமுக (18) கூட்டணி 28 இடங்களையும் அதிமுக(9) கூட்டணி பன்னிரண்டு இடங்களையும் பெற்றிருக்கின்றன. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற அபார வெற்றியுடன் இதனை ஒப்பிட...
தேர்தல் 2009 – என்ன சொல்கிறது?
* தேர்தல் முடிவுகள் பெரிய அதிர்ச்சிகளைத் தராமல் வந்துகொண்டிருக்கின்றன. * மத்தியில் ஆளும் காங்கிரஸ் திரும்பவும் ஆட்சியமைப்பது அநேகமாக உறுதியாகியிருக்கிறது. மீண்டும் மன்மோகன் சிங்கின் பெயரால் சோனியா ஆள்வார். *எதிர்பார்த்ததற்கு மாறாகத் தமிழகத்தில் திமுக கூட்டணி கணிசமான இடங்களில் முன்னணியில் இருக்கிறது. எதிர்பார்த்தபடியே அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில் மூச்சு விட்டுக்கொள்கிறது. * ஈழப் பிரச்னையோ...
இந்தியத் தேர்தல் 2009 – Live
நண்பர்களுக்கு வணக்கம். பொதுவாக எனக்கு ஒரு ராசி உண்டு. புத்தகக் கண்காட்சி, லோக்சபா தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஏதாவது வெளியூர் நிகழ்ச்சி என்று லைவ் அப்டேட் செய்யலாம் என்று உத்தேசித்தால், விட்டேனா பார் என்று எப்போதும் விதி விளையாடும். உடம்புக்கு முடியாமல் போகும், கை கால் உடையும், ஜுரம் வரும், வேறு ஏதாவது வேலைகள் வரும், அட ஒன்றுமில்லையென்றால் இணையத் தொடர்பாவது இல்லாமல் போகும். எனவேதான் இன்றைய...
வலைப்பதிவாளர்களுக்குச் சிறுகதைப் போட்டி
என் நண்பர் சிவராமன் (வலையுலகில் பைத்தியக்காரன் என்றால் தெரியும்.) சமீபத்தில் ‘உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு’ சார்பில் வலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி ஒன்றைத் தமது வலைப்பதிவில் அறிவித்திருக்கிறார். இந்த இயக்கத்தில் அல்லது அமைப்பில் யார் யார் இருக்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்று எதுவும் எனக்குத் தெரியாது. சிவராமனைத் தெரியும், அவரது ஆர்வங்கள் தெரியும், அக்கறை தெரியும் என்பதால்...
போட்டாச்சு.
இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி, சரியாக நாற்பது நிமிடங்கள் கழித்து என்னுடைய வாக்கைப் பதிவு செய்தேன். எப்போதும் வாக்குச்சாவடியில் முதல் பத்து வாக்காளர்களுள் ஒருவனாக இருப்பதே என் வழக்கம். இம்முறை கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பி குரோம்பேட்டை சென்று வாக்களிக்க வேண்டியிருந்ததால் தாமதமாகிவிட்டது. நான் குரோம்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் நுழையும்போதே நல்ல கூட்டம் இருந்தது. பொதுவாக...
கோவிந்தசாமிகளின் குணாதிசயங்கள்
திடீர் திடீரென்று தினசரி ஒழுங்குகளை மாற்றுவது, உணவு, உடை, உறக்கம் போன்றவற்றில் புதிய முயற்சிகள் செய்து பார்ப்பது எப்போதும் எனக்குப் பிடிக்கும். முன்பெல்லாம் ஒரு நாளைக்குப் பன்னிரண்டு முதல் பதினான்கு மணிநேரம் உறங்குவேன். எப்போது படுத்தாலும் தூக்கம் வரும். உறங்கி விழித்து எழுந்து காப்பி சாப்பிட்டுவிட்டுத் திரும்பப் படுத்தாலும் மூன்று மணி நேரம் தூங்க முடியும் என்னால். உறக்கம் என்பது என்னைப்...
வெயிலோடு வாழ்
ஹைதராபாத்துக்கு ஒரு குறும்பயணம் நேர்ந்தது. முதல் மனப்பதிவு, சென்னையை விடக் கெட்டுப்போய்விட்ட நகரம். முன்பு சென்றிருக்கிறேன். பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு. நிறைய பச்சை பார்க்க முடிந்தது. நாம்பள்ளி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி எந்தப் பக்கம் போனாலும் நூறடிக்கு ஒரு பூங்கா, வழியெல்லாம் மரங்கள், ஆங்காங்கே புல் திட்டு என்று கண்ட நினைவு அப்படியே இருக்கிறது. சந்திரபாபு நாயுடு காலத்தில் நகரசுத்தி...