வலை எழுத்து

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 4

பன்றிகள். நாய்கள். மாடுகள். இம்மூன்று ஜீவராசிகளும் இந்நகரத்தின் பங்குதாரர்களுள் ஒரு சாரார். இவை மேயாத எந்தப் பகுதியையும் நகரில் நான் எக்காலத்திலும் கண்டதில்லை. நாய்கள், மாடுகளைவிட, சிறு வயது முதலே நான் நிறையப் பன்றிகளைப் பார்த்து வளர்ந்தவன். உண்மையைச் சொன்னால், உலகின் மிக அழகிய உயிரினம் பன்றிதான் என்று எனக்குத் தோன்றும். குழந்தையைக் கொஞ்சும் தாயின் முகத்தை உற்றுக் கவனியுங்கள். அந்த உதடுகளும்...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 3

அந்தக் குடும்பத்தின் தலைவரான கிழவர் ஐ.சி.எஃப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது தந்தையார் பிரிட்டிஷார் காலத்தில் தபால் / தந்தி துறையில் பணியாற்றியவர். அவருக்கும் முந்தைய தலைமுறைக்காரர் அயர்லாந்தில் இருந்து இங்கே ஊழியம் பார்க்க வந்த குடிமகன். முதல் தலைமுறைக்காரர் செகந்திராபாத்தில் வசித்து வந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளப் போக, அந்த ஆங்கிலோ இந்தியக்...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 2

கண்ணுக்கெட்டும் தொலைவெங்கும் வேலிக்காத்தான் புதர்கள் மண்டியிருந்தன. வெளியூர்க்காரர்கள் இதனை சீமைக் கருவேலம் என்று சொல்லுவார்கள். நான் பிறப்பதற்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தாவரம். ஆஸ்திரேலியாவில் இப்போது இது இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் என் சிறு வயதுகளில் சென்னையின் பல பேட்டைகளை இந்த வேலிக்காத்தான் புதர்களின் அடர்த்தியைக் கொண்டே...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 1

நகரம் காலியாக இருக்கிறது. நடமாட்டம் இல்லை. வீட்டுக் கதவுகள் மூடப்பட்டிருக்கின்றன. கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன. வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. எத்தகைய நெரிசலுக்கும் அசராமல் எல்லா சாலைகளிலும் ஊர்ந்து செல்லும் மாடுகள் எங்கே போயின என்று தெரியவில்லை. எப்போதும் தமக்குள் சண்டையிட்டுக்கொண்டு சீறிப் பாயும் எண்பத்தேழாயிரத்து நாநூற்று எண்பது நாய்களும் முடங்கிவிட்டன. பெட்டிக் கடைகள் இல்லை...

எனக்கு இருபது உனக்குப் பத்து

எனக்கு இருபது உனக்குப் பத்து மேலே உள்ள குறுஞ்செய்தியை வாசித்தீர்களா? இன்று வந்தது. முன்பின் தெரியாத என் பேரில் இந்த நாரீமணிக்குத்தான் எவ்வளவு கரிசனம். இந்தக் கொடூரமான ஊரடங்குக் காலத்தில் நான் இருக்கிறேனா செத்தேனா என்று கேட்கக்கூட ஒரு நாதியற்றுக் கிடப்பது பற்றி அடி மனத்தில் ஒரு துயரம் படிந்திருந்தது. சொன்னால் யார் நம்பப் போகிறார்கள்? வீட்டோடு இருக்கும் இக்காலத்தில் மொத்தமாகவே இதுவரை நான்கைந்து...

எங்கே தேடுவேன்?

இந்த உலகத்தில் எது இல்லாமலும் என்னால் வாழ்ந்துவிட முடியும். ஆனால் மணிக்கொரு தரம் ஒன்றரை டீ ஸ்பூன் அளவுக்கான மாவா இல்லாமல் எனக்கு வேலை ஓடாது. இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்பது பெருங்கதை. அதை இப்போது சொல்லப் போவதில்லை. இந்தப் புலம்பல் சாஹித்யத்தின் நோக்கம், இக்கொடூரமான கிருமி கண்ட காலத்தில் இக்கைச்சீவல் தூளினைப் பெற நான் எத்தனைப் பாடு படவேண்டியிருக்கிறது என்பதைப் புரிய வைப்பதுதான். புகையிலைப்...

யோசித்து நேசிப்போம்

இங்கே கொரோனாவைவிட வேகமாக இன்னொரு அபாயம் பரவிக்கொண்டிருக்கிறது. அது வாசிப்பு குரூப்புகள். எனக்கு இந்தக் குழு வாசிப்பாளர்களைப் பார்த்தாலே திரைப்படங்களில் கண்ட கேங் ரேப் காட்சிகள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. அபூர்வமாக ஒன்றிரண்டு நல்ல மதிப்புரைகள் வந்தாலும் பெரும்பாலும் இக்குழுக்களில் எழுதப்படும் உரைகள் குறிப்பிட்ட புத்தகத்துக்கோ, எழுத்தாளருக்கோ தர்ம சங்கடம் தரக்கூடியவையாகவே இருக்கின்றன. எழுத்தாளர்...

நிரந்தரமானவன் [தே. குமரன்]

ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத்தில் வாய்க்கும் என எவரேனும் சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்.   உடலின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்துள்ள, ‘நிரந்தரத்தை’ (அழிவின்மையை) நோக்கிய ஆன்மாவின் ஏக்கமாக உணர்கிறேன்.   எட்வின் இறந்தவுடன், ஆப்ரஹாம் ஹராரி ஜன்னல் வழியாக வெளியேறுவது அடுத்த...

இறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்

“இறவான்” இந்த ஊரடங்கு தினங்களில் நான் வாசித்த மற்றொரு நாவல். நிச்சயம் குறிப்பிடத்தக்கது. சில நாவல்களை துவக்கம் முதலே ஒரு ஆச்சரியத்துடன் படிப்போம் – “இறவான்” அப்படியான ஒன்று. ஏனென்றால் தமிழில் இப்படியொரு கதையை இதற்கு முன்பு படித்ததாய் எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. ஆங்கிலத்தில் சாமர்செட் மாமின் Moon and the Six Pence நிச்சயம் நினைவுக்கு வந்தது. ஆனால் அது கூட – ஓவியத்தின் பாலுள்ள...

கிருமி

விடிந்து எழுந்ததில் இருந்தே தலை வலித்தது. குனிந்தால் மூக்கில் ஒழுகியது. காதுகளுக்குள் சூடு தெரிந்தது. எப்படியும் சுரம் வரும் என்று தோன்றியது. விபரீதமாக ஏதாவது உருக்கொள்வதற்கு முன்னால் டாக்டரைப் பார்த்துவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அதற்கும் பயமாக இருந்தது. ஊர் இருக்கும் நிலைமையில் எந்த மருத்துவரும் இப்போது பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்லத் தயங்குவார்கள். பரிசோதனைகளுக்கு எழுதித் தரலாம். ஒரு...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Pa Raghavan

Stay informed with curated content and the latest headlines, all delivered straight to your inbox. Subscribe now to stay ahead and never miss a beat!

Skip to content ↓