நான் முதல் முதலில் வாசித்த பாராவின் நாவல், அலகிலா விளையாட்டு. அப்போது எனக்கு அவருடைய முகம் தெரியாது. இந்த நாவலாசிரியருக்குக் குறைந்தது 60-70 வயது இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பாரா அப்போது இளைஞர். இது தெரிந்தபோது வியப்பாக இருந்தது. தனது முப்பதுகளில் உள்ள ஒருவர் இப்படியொரு கதையை எழுத முடியுமா, யோசிக்கத்தான் முடியுமா என்று அப்போது நினைத்தேன். பிறகு அவருடைய புவியிலோரிடம் வாசித்தபோது...
யதி – வாசகர் பார்வை 5 [B. சுதாகர்]
என்னால் நம்பவே முடியவில்லை. நானா இப்படி? விளையாட்டாக ஓரிரு அத்தியாயங்கள் படிக்க ஆரம்பித்து, அதிலேயே மூழ்குகிற வகையில் யதியில் என்னை இழந்தது எப்படி? துறவின் மீது அனைவருக்கும் பொதுவான எதிர்ப்புணர்வும் வியப்புணர்வும் இருக்கும். வாழ வழியின்றி, வாழ்க்கையை எதிர்கொள்ள திராணியின்றி துறவை நாடிச் செல்கின்றனர் என்று நினைப்போர் பலர். கெளதம புத்தரைக் கூடக் குறை சொல்வோர் உண்டு. ஆனால் துறவென்பது ஒரு மனிதனின் மன...
யதி – வாசகர் பார்வை 4 [பிவிஆர்]
யதி வாசித்து முடித்தேன். எங்கே முடித்தேன், அதை விட்டு இன்னும் வெளியே வராமல் அல்லவா கிடக்கிறேன்! சன்னியாசிகளை வியந்துகொண்டும், பிசாசுகளை பயந்துகொண்டும், உறவுச் சிக்கல்களில் உழன்றுகொண்டும், வாழ்வின் பெரும் பகுதியை இழந்துவிடும் அவலத்தில் இருந்து, மிகப்பலரையும் மீட்டெடுக்கும் அருமையான கருவியாகவே பா.ராகவன் எழுதிய யதி எனக்குத் தென்படுகிறது. அம்மாவின் அன்பும் அரவணைப்பும், வீடு தரும் பாதுகாப்பும்...
யதி – வாசகர் பார்வை 3 [லங்காபதி சிறிதரன்]
அன்பின் ராகவன், யதி வாசித்து முடித்தேன். அற்புதம் என்கின்ற சொல்லைத் தவிர வேறு பொருத்தமான சொற்கள் எதையேனும் இடமுடியும் எனத் தோன்றவில்லை. விமல் என்கின்ற ஒற்றைப் பாத்திரத்தின் தன்மையில் நின்றுகொண்டு விஜய், வினய், வினோத், அம்மா, கேசவன் மாமா, பத்மா மாமி, சித்ரா, சொரிமுத்து போன்ற பல்வேறு பாத்திரங்களுக்கூடாக சுவாரசியம் குறையாமல் கதையினை நகர்த்திச் சென்ற விதம் ஆகா போட வைக்கின்றது. ஒரு தாயின் நான்கு...
யதி – வாசகர் பார்வை 2 [எஸ். ஶ்ரீனிவாச ராகவன்]
நம் நாட்டில் சாமியார்கள் பலர் உண்டு. பரதேசி முதல் ராஜகுரு வரை… மக்கள் மனங்களை எத்தனை விதமாகப் பிரிக்க முடியுமோ, அத்தனை விதமான சாமியார்களும் உண்டு. ஆனால் வெகுஜனங்களின் மனத்தில் சாமியார் பற்றிய பிம்பம் ஒரே மாதிரி தான். அவர் உணவு விருப்பம் துறந்தவராக இருக்க வேண்டும். பகட்டு துறந்தவராக இருக்க வேண்டும். சைவ பட்சிணியாக இருக்க வேண்டும். முக்கியமாக அவர் காமம் துறந்தவராக இருக்க வேண்டும். அத்தனை...
யதி – வாசகர் பார்வை 1 [உஷாந்தி கௌதமன்]
யதியின் முதலாவது அத்தியாயத்தில் ஒரு புதரைப் பற்றிய வர்ணனை வரும். ஒரு புதரில் வேறு வேறு செடிகள் எங்ஙனம் கிளைகளின் அடர்த்தியில் கூட சரியாகப் பிரிந்து இணைந்து ஒரே மரம் போல உருவாகியிருக்கும் என்று. இந்தக் கதையில் வருபவர்களும் அப்படித்தான். யாருக்குமே ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லை. ஆனாலும் ஒன்றே போல ஒரு நூற்பின்னல் கொண்டு இணைக்கப்பட்டிருப்பார்கள். மொத்தக் கதையும் நான்காவது சகோதரனான விமலின்...
யதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு
இதனைப் போட்டி என்று குறிப்பிடச் சிறிது தயக்கமாக உள்ளது. ஒரு சிறிய பரிசோதனை முயற்சி. தினமணி இணையத் தளத்தில் நான் எழுதி வரும் ‘யதி’ நவம்பரில் நிறைவடைகிறது. ஜனவரி சென்னை புத்தகக் காட்சியில் அது புத்தகமாக வரும். அத்தியாயங்களை நீங்கள் மொத்தமாக தினமணி தளத்தில் வாசிக்கலாம். யதி, முழுவதும் இங்கே சேமிக்கப்படுகிறது: இது புத்தகமாக வரும்போது யாரையாவது முன்னுரை எழுதச் சொல்லலாம் என்று தோன்றியது...
ஆதிவராகம் [சிறுகதை]
அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்படியே சில நூறடிகள் தள்ளி மணல் மேடிட்டிருக்கும். மணல் மேட்டின்மீது பையன்கள் முட்டிவரை நிஜாரை இறக்கி விட்டுக்கொண்டு மலம் கழித்துக்கொண்டிருப்பார்கள். மறு பக்கம் குளம்போல் கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருக்கும். ஓடும் நீரும் இந்த நீரும் வேறு வேறு...
அஞ்சலி: பாலகுமாரன்
பாலகுமாரன் இறந்துவிட்டார் என்று என் மனைவியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தபோது தொலைபேசி சிக்னலும் கிட்டாத ஓர் அறைக்குள் கதை விவாதத்தில் இருந்தேன். வருத்தமாக இருந்தது. அவரை நினைவுகூர பல நல்ல சம்பவங்கள் எனக்குண்டு. ஆனாலும் கடைசிக் காலத்தில் அவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளும்படியாக ஒரு காரியம் செய்தேன். அதுதான் முதலில் நினைவுக்கு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் ஒரு குறுவரி...
ஐந்து புத்தகங்கள்
இன்று சர்வதேச புத்தக தினம். இந்நாளில் ஐந்து புத்தகங்களை எண்ணிக்கொள்கிறேன். 1. ஜனனி – லாசரா எனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த முதல் புத்தகம். லாசராவின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான கவிஞர் நா.சீ வரதராஜன் எனக்கு இதைக் கொடுத்து, படிக்கச் சொன்னார். முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஜனனியின் அருமை புரியவில்லை. அந்தப் பிரதியின் முக்கியத்துவமும் தெரியாது [முதல் பதிப்பின் இரண்டாவது பிரதி அது...