Categoryஅறிவிப்பு

தவற விடுவது தவறு

தொடங்கி ஒரு மாதத்துக்குள் தீபாவளி வந்துவிட்டதால் தமிழ் பேப்பருக்கு இது தலை தீபாவளி. நாளை தமிழ் பேப்பர் தீபாவளிச் சிறப்பிதழாக வெளிவருகிறது. * தன்மீது வைக்கப்படும் கடுமையான விமரிசனங்களுக்கும் பொறுமையாக பதில் சொல்கிறார் ஜெயமோகன் – விரிவான பேட்டி. * ஆழி பெரிது என்று ஒரு தொடர் ஆரம்பிக்கிறார் அரவிந்தன் நீலகண்டன். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தலைமுறையின் உலகுக்கு வாசகர்களை விரல் பிடித்து...

தமிழ் பேப்பர்

நண்பர்களுக்கு வணக்கம். வருகிற சனிக்கிழமை, அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி தினம் முதல் தமிழ் பேப்பர் என்னும் இணைய இதழைத் தொடங்குகிறேன். இது எங்களுடைய New Horizon Mediaவின் மற்றொரு மின்வெளி முயற்சி. இணைய எழுத்து – அச்சுப் பத்திரிகை எழுத்து இரண்டுக்குமான இடைவெளியை மேலும் சற்றுக் குறைக்க எங்களால் ஆன எளிய முயற்சி. இது தினசரியா, வார இதழா, மாதம் இருமுறையா, மாதம் ஒருமுறையா என்கிற கேள்விகளுக்கு...

பத்ரி நலமாக இருக்கிறார்!

இன்று காலை ஹிந்து நாளிதழின் நீத்தார் குறிப்பு விளம்பரப் பகுதியைப் பார்த்த பலபேர், அதிர்ச்சியடைந்து பத்ரிக்குத் தொலைபேசிய வண்ணம் உள்ளார்கள். ‘ஓ, நீங்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறீர்களா?’ என்று ஜோக்கடிப்போர் முதல், தமது அதிர்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையில்லாமல் தவித்துத் திண்டாடுவோர் வரை அவர்களுள் பலவிதம். ஹிந்துவில் ‘காலமானார்’ என்று இன்று குறிப்பிடப்பட்டிருக்கும் பத்ரி சேஷாத்ரி வேறு யாரோ...

ஓர் அறிவிப்பு

  முன்போல் அடிக்கடி இங்கே எழுத முடிவதில்லை. வேலைகள் ஒரு பக்கம். ஆர்வக்குறைவு முக்கியம். எழுத்தைக் குறைத்து, கொஞ்சநாள் வெறுமனே படித்துக்கொண்டிருக்கலாம் என்று திட்டம். எனவே படிக்கிறேன். எழுதாதது பற்றிக் கடிதம் எழுதி விசாரிக்கும் நண்பர்கள் மன்னிக்கவும். திரும்பவும் வலையெழுத்தில் ஆர்வம் வரும்போது வருவேன். இந்தப் பதிவின் முக்கிய நோக்கம், இங்கே நான் எழுதிய பல பழைய கட்டுரைகளை இப்போது படித்துவிட்டு...

அறிவிப்பு

வைரஸ், பாக்டீரியா, அமீபா என்னவோ ஒரு சனியன் தாக்கியதன் காரணமாக இன்று பிற்பகல் முதல் இந்தத் தளம், வாசகர்களுக்கு நிரம்ப சிரமம் கொடுத்திருப்பதாக அறிகிறேன். வருத்தம். இப்போது சரி செய்யபப்ட்டுவிட்டது. சில கட்டுரைகளில் புகைப்படங்கள் காணாமல் போயிருக்கலாம் என்று தள நிர்வாகி சொல்கிறார். அதனாலென்ன என்று சொல்லிவிட்டேன். இடைப்பட்ட நேரத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரை தமிழோவியம் தளத்தில் வெளியாகியிருக்கிறது...

எம்.ஜி.ஆர். கதை

தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ, ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு. இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். சினிமா காரணமென்றால் வேறு யாராலும் முடியவில்லையே? பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் தொடங்கிவைத்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக்...

தண்டனை பெறாத வில்லன்

இடி அமினைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் பலபேருக்கு இருப்பதை அவ்வப்போது கவனித்திருக்கிறேன். பெரிய கொடுங்கோலன், கொலைகாரன், காமுகன், சுகபோகத்தின் உச்சத்தில் வாழ்ந்தவன், செய்யாத அராஜகங்கள் இல்லை, திடீரென்று காணாமல் போய்விட்டானாமே, யாரவன்? பல சந்தர்ப்பங்களில் பலபேர் கேட்டிருக்கிறார்கள். உகாண்டா ராணுவப் புரட்சியோ, புரட்சிக்குப் பிந்தைய ஆட்சிக்கால விவரங்களோ, இடி அமின் எவ்வாறு பதவி விலக...

இரண்டு தொடர்கள்

ஜோவென்று பொங்கிப் பெருகிக்கொண்டிருந்தது நதி. கண்ணுக்குத் தென்பட்ட தொலைவுவரை, நிலமெல்லாம் நீராக இருந்தது. அது கதுத்ரி நதியாக இருக்கலாம். இன்றைக்கு சட்லெஜ் என்று பெயர். அசின்யை என்கிற சந்திரபாகா நதியாக இருக்கலாம். சீனாப் என்று நாம் சொல்லுவோம். ஒருவேளை விதஸ்யை என்கிற ஜீலம் நதியாகவும் இருக்கலாம். ஆர்ஜீகி, சுசோமா, விபாசா என்று வேறு ஏதாவது சிந்துவின் கிளை நதியாக இருக்கலாம். இன்றுவரை பெயர் மாறாத...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter