நல்லி செட்டியாருக்கு என்று அறிவிக்கப்பட்டாலும் தமிழர்கள் ஜீரணித்துவிடுவார்கள் என்றாலும், நாஞ்சில் நாடனுக்கு இவ்வாண்டு சாகித்ய அகடமி விருது என்னும் அறிவிப்பு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. நாஞ்சிலுக்கு அன்பான வாழ்த்துகள். தலைகீழ் விகிதங்கள் தொடங்கி நாஞ்சில் நாடனின் ஒரு படைப்பையும் நான் விட்டதில்லை. நமக்கே நமக்கென்று அந்தரங்கமாகச் சில விஷயங்கள் எப்போதும் இருக்குமல்லவா...
அயோக்கிய சிகாமணி
பொதுவாக எனக்குக் கோபம் வராது. என்னை உசுப்பேற்றுவது மிகவும் கடினமான காரியம் என்று தெரிந்தவர்கள் சொல்லுவார்கள். என்னையறியாமல் இன்று மிகக் கடுமையான கோபத்துக்கு ஆட்பட நேர்ந்தது. விஷயம் இது: தெரிந்தவர் ஒருவர் வீட்டில் பிரச்னை. சில காலமாகவே. அவருக்கு வியாபாரத்தில் மந்தநிலை. எனவே பொருளாதாரச் சிக்கல். அடிக்கடி கணவன் மனைவிக்குள் பிணக்கு வரும். கோபித்துக்கொண்டு இருவரில் யாரும் அம்மா வீட்டுக்குப் போக...
நானேதானாயிடுக
என்னைவிட அழகாக இருக்கும் இப்படத்தை வரைந்தவர், என் நண்பர் சித்ரன் (என்கிற ரகு). இதன் சரித்திர முக்கியத்துவம் கருதி இங்கே சேமித்துவைக்கிறேன்.
அஞ்சலி: ஆர். சூடாமணி
அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். சிறுகதை கேட்டு இரு வாரங்கள் முன்பு நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றேன். இத்துடன் ஒரு கதை இணைத்திருக்கிறேன். பிரசுரிக்க இயலாது என்று கருதுவீர்களானால் திருப்பி அனுப்பிவிடலாம். உடன், போதிய தபால் தலை ஒட்டப்பட்ட கவர் உள்ளது. தங்கள் அன்புள்ள… புதிய அல்லது அறிமுக எழுத்தாளர்களிடம் எந்தப் பத்திரிகையும் கதை கேட்டுக் கடிதம் எழுதாது. பிரபலங்களிடம் மட்டும்தான். தவிரவும்...
ஆசிரியர் தின வாழ்த்துகள்
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்.
பரிசோதனை
சில ட்விட்டர் நண்பர்களின் ஆலோசனைப்படி விண்டோஸ் லைவ் எடிட்டரைத் தரவிறக்கம் செய்து அதில் இருந்து இத்தளத்தில் நேரடியாக எழுத முடியுமா என்று பார்க்கிறேன். இது ஒரு பரிசோதனைப் பதிவு. குறிப்பிட்ட விஷயம் ஏதுமில்லை. சில தினங்களாகவே நீண்ட கட்டுரைகள் எழுத நேரமில்லாமல் இருக்கிறது. செம்மொழி மாநாடு தொடர்பாகவே சில கட்டுரைகள் எழுத நினைத்தும் முடியாமல் போய்விட்டது. அவசரத் தொடர்புக்கு ட்விட்டர் போதுமானதாக...
அண்ணன், அண்ணியை எப்படி அழைப்பார்?
நேற்று ஒரு வார இதழைப் புரட்டிக்கொண்டிருந்தேன். கேள்வி பதில் பகுதியில் வாசகரொருவர் கேட்டிருந்த கேள்வி: ‘அருமை அண்ணன் விஜய், அருமை அண்ணியாரை வீட்டில் எவ்வாறு அழைக்கிறார் என்று கண்டறிந்து சொல்ல முடியுமா?’ இதற்கு பதிலளிப்பவர், நடிகர் விஜய் குடும்பத்துக்கு நெருக்கமான இன்னொரு பத்திரிகையாளரிடம் இது பற்றி அக்கறையாக விசாரித்து, தகவல் பிழையில்லாமல் அருமையான பதில் ஒன்றைத் தந்திருந்தார். அது...
ஒரு தீவிரவாத செயல்திட்டம்
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்தது. வீட்டில் ஒரு விசேஷம். வருகிற விருந்தினர்களுக்கு வெற்றிலை பாக்குடன் என்ன வைத்துக்கொடுக்கலாம் என்று பேச்சு வந்தது. என் அப்பாவை சந்தோஷப்படுத்த முடிவு செய்து, நான் ஓர் அறிவிப்பு செய்தேன். எத்தனை பேர் வந்தாலும் சரி. வெற்றிலை பாக்குடன் என் அப்பா எழுதிய திருக்குறள் உரை புத்தகத்தை அவர்களுக்கு அன்பளிப்பாகத் தருவது. செலவும் பொறுப்பும் என்னுடையது. அப்பாவுக்கு...