'அப்பா, இந்த சீனிவாசன் ஏந்தான் இப்படி பண்றானோ தெரியல.’ ‘என்னடா கண்ணு பண்றான்?’ ‘இதுவரைக்கும் மூணுபேரை லவ் பண்ணிட்டான்.’ ‘யார் யாரு?’ ‘நித்யப்ரீதா, சம்யுக்தா, தீப்தி.’ ‘ஓ! பெரிய பிரச்னைதான்.’ ‘அவன் சம்யுக்தாவ லவ் பண்றது எனக்குப் பிடிக்கலை.’ ‘ஏண்டா செல்லம்?’ ‘அவ என் பெஸ்ட் ஃப்ரெண்ட்.’...
தில்லிக்குப் போன விண்வெளி வீரன்
தில்லி உலகப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன். எனக்குத் தனிப்பட்ட முறையில், பணி சார்ந்து பேருதவியாக அமைந்த அனுபவம். எனினும் பொதுவில் பகிர்ந்துகொள்ளவும் சில விஷயங்கள் உண்டு. வந்ததுமே அதுபற்றி எழுத நினைத்தேன். ஆனால் முடியவில்லை. காரணம் கால்வலி. ஏற்கெனவே உடல்நலம் சரியில்லாத நிலையில்தான் தில்லிக்குச் சென்றேன். நல்ல மலேரியாவும் சுமாரான சிக்குன் குன்யாவும் இணைந்து வந்து சென்னை புத்தகக் கண்காட்சி...
சுகம் பிரம்மாஸ்மி – 7
இளங்கோவன் ஒரு நாத்திகர் என்று ரங்கராஜன் சொன்னது எனக்கு மிகவும் வியப்பான விஷயமாக இருந்தது. அவர் குருகுல வாசம் செய்த இரு இடங்களுமே சாமிநாதய்யார் தமது என் சரித்திரத்தில் விவரிக்கும் சைவ மடாலயங்களுக்கு நிகரானவை. ஆசார அனுஷ்டானங்கள் மிக்க, கடும் நியம நிஷ்டைகள் கடைப்பிடிக்க வேண்டிய இடங்கள். முதலாவது கி.வா. ஜகந்நாதன் பள்ளி. அடுத்தது ஏ.என். சிவராமன் பள்ளி. இந்த இரண்டு பத்திரிகை உலகப் பெரியவர்களையும் நான்...
சுகம் பிரம்மாஸ்மி – மீண்டும்
2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் சுகம் பிரம்மாஸ்மி என்றொரு தொடரை இத்தளத்தில் எழுத ஆரம்பித்தேன். ஆறு அத்தியாயங்கள் வரை எழுதினேன். பிறகு தொடர இயலாது போய்விட்டது. பல்வேறு பணி நெருக்கடிகள், கவனச் சிதறல்களே காரணம். இன்றைக்குச் சற்று நேரம் முன்பு என் நண்பர் ஒருவருடன் – அவர் ஒரு நல்ல நாத்திகர் – கடவுளைப் பற்றியும் சாதுக்கள் பற்றியும் தத்துவங்கள் பற்றியும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க...
மயிலைத் திருவிழா படங்கள்
மயிலாப்பூர் ஃபெஸ்டிவல் நேற்று முதல் நடக்கிறது. நேற்று சில படங்கள் எடுத்தேன். சுமாராக வந்தவற்றுள் சில இங்கே.
ஸ்ரீபார்வதி அன்லிமிடெட்
பாரதியாருக்குப் பிடித்த மாதிரி சுற்றிலும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள். எனவே நிழல். கால் வைக்கும் இடமெல்லாம் புல்வெளி. புல்லுக்கு நடுவே பாத்தி கட்டி மூங்கில் கழிகள் நட்டு, கூம்பு வடிவ ஓலைக்கூரை. கொட்டிக்கொண்டு ஓடும் காற்று. நடுவே நீள டேபிள் போட்டு எதிரும் புதிருமாக நாற்காலிகள். இங்கொரு தொட்டில், அங்கொரு வட்டில். ‘சார் வாங்க! உக்காருங்க!’ என்று முகம் மலரக் கூப்பிடுகிறார் பணியாளர்...
கண்காட்சி, பயிலரங்கம், கண்காட்சி
சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு வழியாக முடிந்தது. வழக்கத்தைவிட அதிக மக்கள் கூட்டம், அதிக விற்பனை, அதிக சுவாரசியங்கள். பதினோறாம் தேதியே இதனை எழுதாததன் காரணம், உடம்புக்கு முடியாமல் போய்விட்டதுதான். கண்காட்சி சமயம் என்னவாவது படுத்தல் ஏற்படுவதென்பது என் ராசி. சென்ற வருடம் மாதிரி கால் கட்டு போட்டுக்கொண்டு வீட்டோடு முடங்கிவிடாமல் இம்முறை பத்து நாளும் செல்ல முடிந்தது பெரிய விஷயம் என்று...
எது? ஏன்? எதனால்?
கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் என்னென்ன புத்தகங்கள் நிறைய விற்கின்றன, மக்கள் எவற்றின் அடிப்படையில் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வாங்கும் விதத்தில் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றனவா என்பதை தினசரி சில மணி நேரங்கள் கவனித்து வந்தேன். எல்லா அரங்குகளிலும் நின்று பார்ப்பது எனக்கு சாத்தியமில்லை. கவனிக்கவேண்டும் என்று நான்...
அபூர்வ சகோதரர்கள்
மேலே உள்ள படத்தில் இருப்பவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள். இவர்கள் சொந்தச் சகோதரர்கள் அல்லர். ஆனாலும் இருவர் தோற்றத்திலும் உள்ள ஒற்றுமைகள் வியப்பூட்டக்கூடியவை.
இரு முகங்களிலும் குறைந்தபட்சம் 6 ஒற்றுமைகள் உள்ளன. பொழுதுபோகாதபோது கண்டுபிடிக்கலாம். கூடவே இருவரும் யாரென்றும் சொல்லலாம்.
கமல் அல்ல, முகில்.
இன்றைக்குச் சொல்லி மாளாத கூட்டம். எல்லா அரங்குகளிலும் நிற்க இடமில்லாத அளவுக்கு. பில் போட்டவர்கள் மிகவும் பாவம். கிழக்கில் பிரசன்னா, விஸ்வா, மணிகண்டன் எல்லோரும் பிசாசாகவே மாறியிருந்ததைக் கண்டேன். ராத்திரி அவர்களுக்கு நல்ல உறக்கம் அமையவேண்டும். கிழக்கு அரங்கில் இன்றைக்கு இரண்டு விசேஷங்கள். முதலாவது, ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் நூலின் ஆசிரியர் கே. ரகோத்தமன் வருகை தந்தது. எந்த ஒரு...