வலை எழுத்து

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 21)

மனித மனமானது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் மனமானது செம்மையாகும் வழியே இல்லையே. கோவிந்தசாமியின் மனம், உடல், ஆன்மா ஒன்றுடன் ஒன்று இணைய மறுக்கிறது. மறுத்தலுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து விடுகிறான். கோவிந்தசாமியின் மன அலைகளைச் சூனியன் உள்ளுக்குள் இருந்தே பார்த்தே உள்ளூர ரசிக்கிறான். சூனியன் தன் நிலைநிறுத்தலை எண்ணிக் கொண்டே இருக்கிறான். செம்மொழிப்ரியா எனும் உருக்கொண்டு...

மூக்குப் பொடி

கொடியணி மாடமோங்கிக் குலவுசீ ரானைக் காவில் படியினி லுள்ளார்செய்த பாக்கிய மனையான்செங்கைத் தொடியினினர் மதனன்சோம சுந்தரன் கடையினிற்செய்த பொடியினைப் போடாமூக்கு புண்ணியஞ் செய்யாமூக்கே. மேற்படி பாடல், திருவானைகாவில் மூக்குப் பொடிக் கடை வைத்திருந்த சோமசுந்தரம் என்பவரையும் அவரது மூக்குப் பொடியின் பெருமையையும் சொல்கிறது. இந்தப் பாடலை உ.வே. சாமிநாதய்யரும் அவரது ஆசிரியர்களுள் ஒருவரான தியாகராஜ செட்டியாரும்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 22)

புதிதாய் கிடைத்த சுதந்திரமும், தனிமையும் எந்த ஒரு மனிதனையும், ( நமது கதையில் நிழலையும் ) ஏதாவது ஒரு பிடிமானத்திற்கு ஏங்கத்தான் செய்து விடுகிறது. அப்படி நம் நிழலின் பிடிமானம் தான் அவனுக்கு பரிச்சயமான ஒரே முகமான நம் சாகரிகா, அதை காதல் என தவறாய் புரிந்துக்கொண்டு அவளை தேடி கண்டு கொள்கிறது நம் நிழல். நமது நிழலின் பதிவு, பலரின் பச்சாதாபத்தைத் தேடித் தருகிறது. கடமைக்கே என சிலர் தங்கள் கருத்துகளை பதிவு...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 22)

கோவிந்தன் ஒரு பக்கம் சாகரிகாவுடன் இணைவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்க, திடீரென அவனது நிழலுக்கு அவள்மீது மையல் வந்துவிடுகிறது. அது தனித்துவிடப்பட்டதனால் இப்படியொரு விஷயம் அதற்கு நிகழ்ந்திருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது. இப்போதைக்கு கோவிந்தனின் பெயரில் அது நகரத்து பிரஜை ஆகிவிட்டபடியால் அது அந்த வெள்ளைப் பலகையில் நகரத்தாரின் கவனத்தை ஈர்க்க ஒரு பதிவு போடுகிறது. சமூகவலைத்தளங்களின் போலி இரக்கம்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 21)

சூனியன் முதலில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி சாகரிகா மீது அபாண்டத்தை சுமத்துகிறான். அதன்பிறகு இன்னொரு கதாபாத்திரத்தை இன்னொரு அபாண்டத்துடன் உருவாக்குகிறான். இப்போது அவன் உருவாக்கிய இரண்டாவது கதாபாத்திரம் தன் பங்குக்கு இன்னொரு (மூன்றாவது) கதாபாத்திரத்தை உருவாக்குகிறது. அந்த உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் உண்மையென முதலில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் சாட்சி சொல்கிறது. இந்த அபாண்டங்களை உண்மை என நம்பி...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 20)

கோவிந்தசாமியைச் சாகரிகா வெறுத்தாலும் அவள் மீது தீராக் காதலுடன் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவள் மூலம் தனக்குக் குழந்தை வேண்டுமென எண்ணுகிறான். தன் சாட்சியாக ஒரு பிம்பம் வேண்டுமென எண்ணுகிறான். அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிந்தும் அவனால் அவன் மனத்தை மாற்ற முடியவில்லை. அவன் எண்ணும் எதுவும் நிறைவேறாது என்பதை ஷில்பா கூறினாலும் தன் முடிவை அவன் மாற்றிக்கொள்ள எண்ணவில்லை. இதற்கு முந்தைய அத்தியாயங்களில்...

கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 6)

இதுவரை சிரிப்பதற்கு இதில் எதுவுமில்லை என்றிருந்தேன். இந்த அத்தியாயம் அதை தோற்கடித்து விட்டது. வெறும் கதையாக மட்டும் படிக்காமல் எண்ணத்தில் கதையை ஓடவிட்டால் ஹாலிவுட் படங்களை மிஞ்சிவிடும் அபார கற்பனை ஆசிரியருக்கு. நீல நகரத்தில் உலா வரும் சூனியனும் கோவிந்தசாமியின் நிழலும் அந்நகரத்தையும் அங்கு வசிக்கும் மனிதர்களையும் பார்வையிடுகிறார்கள். நீல நகரத்தின் கட்டிடங்கள் மொக்கையான என்ஜினீயரிங் டிசைன் என்பதால்...

கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 5)

கோவிந்தசாமியை மிகவும் பிடித்ததற்கு காரணம் அவன் சிறந்த மூடனாக இருந்தான். ஒரு மூடனால் சூனியனுக்கு என்ன நடந்துவிடப்போகிறது?நான்கு அத்தியாயங்களை கடந்து ஐந்தாம் அத்தியாயத்திற்குள் பிரவேசிக்கும் போது நாம் யாராக இருந்து இக்கதையை படிக்கப்போகிறோம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். சூனியனா?கோவிந்தசாமியா?இப்போதைக்கு இருவருமே ஒன்றுதான். ஆனால் கோவிந்தசாமியாக இருப்பதில் ஒரு சிறு நன்மை இருக்கிறது அது நாம்...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 22)

எளிய மனிதர்கள் நீல நகரத்தில் இருந்தாலும்கூட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிக்கொண்டே இருப்பார்கள் போல! கோவிந்தசாமியின் நிழல் தனக்கான அடிப்படை உரிமையைக் கோரி, யதார்த்தமாகவே கோஷமெழுப்புகிறது. துணைதேடும் நிழலின் விருப்பம் நியாயமானதாகவே படுகிறது. சாகரிகா-கோவிந்தசாமி நிழல் இணைவுக்கு ஷில்பா எல்லாவகையிலும் உதவுவார் என்று நினைக்கிறேன். ஒருவழியாக சாகரிகாவின் வீட்டில் தங்குவதற்குக் கோவிந்தசாமியின்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 21)

இந்த அத்தியாயத்தைப் படித்து முடிக்கும் சமயம், மனம் கனத்துப் போய் நிற்கிறது. கரு கலைப்பு குறித்து சாகரிகாவைச் சாடி உணர்ச்சிமிக்க ஒரு பதிவை ஏற்றம் செய்கிறான் சூனியன், அவன் தான் கோவிந்தசாமியை ஆக்ரமித்து, செம்மொழிப்ரியாவாகவும், பதினாறாம் நரகேசரியாகவும் பதிவுகளை செய்து வருகிறான். எதிர்பார்த்தது தான். செம்மொழிப்ரியாவுக்கு ஆதரவுகள் குவிந்தும், சாகரிகாவிற்கு எதிர்ப்புகள் வந்த வண்ணமாய் இருக்கிறது. மேலும்...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!