டிஸ்கவரி புக் பேலஸ் கடந்த ஜனவரி முதல் தேதி நடத்திய வாசகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தேன். அந்த நிகழ்ச்சியின் வீடியோவை டிஸ்கவரி வேடியப்பன் யுட்யூபில் வெளியிட்டுள்ளார்.
பார்க்க: பகுதி 1 | பகுதி 2
விழியற்றவன் வம்சம்
இது கதைகளை உண்டு வளர்ந்த சமூகம். எப்படி யோசித்துப் பார்த்தாலும் நம்மால் கதைகளற்ற ஒரு வாழ்க்கையை வாழவே முடியாது என்றுதான் தோன்றுகிறது. போதனைக் கதைகள். நீதிக் கதைகள். விசித்திரக் கதைகள். மாயாஜாலக் கதைகள். தேவதைக் கதைகள். தெய்வக் கதைகள். பேய்க் கதைகள். பாட்டி சுட்ட வடைகளுக்குள் புதைத்து வைக்கப்பட்ட ரகசியமாக ஆயிரமாயிரம் கதைகள் காக்கைகளால் கவர்ந்து செல்லப்பட்டு பாரத மண்ணெங்கும் உதிர்க்கப்பட்டன. காலம்...
யதி – புதிய நாவல்
யதியை எழுதத் தொடங்குகிறேன். 2009ல் என் அப்பாவின் புத்தகச் சேமிப்பை ஒரு நாள் அளைந்துகொண்டிருந்தபோது ஜாபால உபநிடதம் என்ற பழம்பிரதியொன்று கண்ணில் பட்டது. அது எத்தனை காலப் பழசு என்றுகூடத் தெரியவில்லை. முதல் சில பக்கங்கள் இல்லாமல், பழுப்பேறி, செல்லரித்து, தொட்டால் உதிரும் தருவாயில் இருந்தது அந்நூல். அப்பா வேதாந்த நாட்டம் கொண்டவரல்லர். அப்படியொரு பிரதியை அவர் தேடி அடைந்திருக்க முடியாது. யாரோ...
போண்டா திருடன் [சிறுகதை]
இந்தக் கூத்தைக் கேளுங்கள். கேளம்பாக்கம் மன்னார் கடையில் ஒரு நாள் தவறாமல் போண்டா திருடிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வந்து எல்லாரிடமும் காட்டிவிட்டுத் தானே தின்று தீர்க்கும் வெங்கடபதி ராஜு இன்றைக்கு ஒரு போலிஸ் ஆபீசராம். இரண்டு வருஷங்களுக்கு முன்பு அவனுக்கு முதலமைச்சர் ஏதோ சாதனைக்காக விருதெல்லாம் அளித்திருக்கிறார்களாம். இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? அவன் சர்வ நிச்சயமாக ஒரு...
மாலுமி [சிறுகதை]
ஆதியிலே வினாயகஞ் செட்டியார் என்றொரு தன வணிகர் மதராச பட்டணத்திலே வண்ணாரப்பேட்டை கிராமத்தில் தனது குடும்பக் கிழத்தி, குஞ்சு குளுவான்களோடு சௌக்கியமாக வசித்து வந்தார். துறைமுக வளாகத்தில் வந்திறங்கும் பர்மா ஷேல் எண்ணெய் கம்பேனியின் சரக்குகளைப் பட்டணத்தின் பல திக்குகளிலும் இருந்த அக்கம்பேனியின் சேமிப்புக் கிட்டங்கிகளுக்குக் கொண்டு சேர்க்கிற ஒப்பந்த ஊர்திகளில் ஒன்பது ஊர்திகள் அவருக்குச் சொந்தமானவையாக...
பூனை சொன்ன கதை – நாடோடி சீனு
அன்பின் பா.ரா, வணக்கம். இந்தக் கடிதம் எதற்கென இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். நிச்சயமாக இதனை ஒரு வாசகர் கடிதம் என்றோ இல்லை வாசகர் விமர்சனக்கடிதம் என்றோ கூட எடுத்துக்கொள்ளலாம். அதற்கான மொத்த உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. இன்றைக்குத்தான் பூனைக்கதை படித்து முடித்தேன். படித்து முடித்தபின் எழும் நினைவுகளை ஒவ்வொன்றாகச் சேகரித்து அதனை வார்த்தைகளாக்கிக் கொண்டிருக்கிறேன். இத்தருணத்தில்...
உண்ணாவிரதம் – சில விளக்கங்கள்
அன்புள்ள சதீஷ் குமார், உங்களுடைய மறுப்புக்குச் சற்று விரிவாகவே பதில் சொல்ல விரும்புகிறேன். அநியாயத்துக்கு நீங்கள் காந்தி, வள்ளலார், ரிஷிகளையெல்லாம் உதவிக்கு அழைத்துவிட்டதால் எனக்கு வேறு வழியில்லாமல் போகிறது. துரதிருஷ்டவசமாக காந்தியையும் வள்ளலாரையும் ஓரளவு படித்துத் தொலைத்தவனானதால் இச்சங்கடம். அதற்குமுன் ஒரு சங்கதி. ஜீயர் சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவிக்கவில்லை என்ற தொனியில் நீங்கள்...
உண்ணாவிரதம் – ஒரு மறுப்பு
ஃபேஸ்புக்கில் நான் எழுதிய உண்ணாவிரதம் இருக்க சில வழிமுறைகள் கட்டுரைக்கு சதீஷ்குமார் ஶ்ரீனிவாசன் பின்வரும் மறுப்பை அங்கு பதிவு செய்திருந்தார். இதற்கு என் பதில் தனியே வெளியாகியுள்ளது. Sathishkumar Srinivasan பா.ரா அவர்களுக்கு… உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும் என்று எழுத நினைத்து, அதை ஜீயரின் உண்ணாவிரதத்தை குறித்து எழுதியது தவறு.. உண்ணாவிரதம் இருக்க உடல் தகுதி வேண்டும் என சொல்வதும், அதற்கு...
உண்ணாவிரதம் – சில குறிப்புகள்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இரண்டாவது முறையாக உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டேன். பாவமாக இருக்கிறது. ஐம்பது, ஐம்பத்தைந்து வயது தாண்டியவர்கள் திடீரென்று இம்மாதிரியான நடவடிக்கைகளில் இறங்குவது சரியல்ல. எதிர்ப்பைத் தெரிவிக்க, மிரட்டல் விடுக்க வேறு பல வழிகள் உள்ளன. உண்ணாவிரதம் மிகவும் சிரமமானது. அப்படியே அதை இருந்துதான் தீரவேண்டுமானால் சாகும்வரை என்று குறிப்பிடுவதை விட்டுவிட்டு...
வைணவ நாகஸ்வரக் கலை மரபு – ஆவண முயற்சி
சைவ நாகஸ்வர மரபை ஆவணப்படுத்திய லலிதா ராமின் பரிவாதினி அமைப்பு இப்போது வைணவ நாகஸ்வரக் கலை மரபை ஆவணப் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது மிக முக்கியமானதொரு பணி. நாகஸ்வர இசையின்றிக் கோயில்கள் கிடையாது. குறிப்பாக வைணவ ஆலயங்களின் ஒவ்வொரு வழிபாட்டு நடைமுறைக்கும் பிரத்தியேக இசை இணை உண்டு. உற்சவங்களில் இது உச்சம் பெறும். கோயில்களுக்குப் போகிறவர்களில் எத்தனைப் பேர் அங்கு ஒலிக்கும் நாகஸ்வர இசையை...