பொதுவாக வேலை செய்ய அமரும்போது ஃபேன் போட மாட்டேன். ஏசிதான் எப்போதும். ஃபேன் சத்தம் அலர்ஜி. ஏசியிலும் சத்தம் உண்டென்றாலும் அந்தளவு மோசமில்லை. ஆனால் என் அலுவலகத்தில் ஏசி கிடையாது. எனவே ஃபேனை அணைத்துவிட்டு எழுதுவேன். எழுதாமல், யோசிக்கும்போது ஃபேன் போட்டுக்கொள்வேன். அதாவது குளிர்ச்சி, சூடு என்பது பொருட்டல்ல. சத்தம், சத்தமின்மையே பேசுபொருள். இப்படித்தான் சென்ற ஆண்டு வரை வாழ்ந்து வந்தேன். என்ன காரணமோ...
மெட்ராஸ் பேப்பர் விழா
மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா – 13 நூல்கள் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 11ம் தேதி புதன் கிழமை அன்று சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் சிறப்பாக நடந்தேறியது. விழாவினை நண்பர் கபிலன் (ஸ்ருதி டிவி) நேரலையில் கண்டு களிக்க வழி செய்தார். பெருந்திரளாகக் கூடிய வாசகர்களின் வாழ்த்து புதிய தெம்பையும் உற்சாகத்தையும் தந்தது. விழாவின் வீடியோக்கள் கீழே உள்ளன. விழாவில் எனது வரவேற்புரை...
தாராவின் காதலர்கள்
மனுஷ்யபுத்திரனின் ‘தாராவின் காதலர்கள்’ நாவல் வெளியீட்டு விழாவில் நான் பேசிய உரை கீழே.
வாவ் தமிழா பேட்டி
நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி, தமிழில் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களைக் குறித்து வாவ் தமிழா யூ ட்யூப் சேனலுக்காக நண்பர் தளவாய் சுந்தரத்துக்கு ஒரு பேட்டியளித்தேன். கீழே அது இரண்டு பகுதிகளாகத் தரப்பட்டுள்ளது.
இது போதும்
நேற்று டிஸ்கவரி வேடியப்பன் அழைப்பின் பேரில் ஆண்டிறுதி புத்தக இரவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். நண்பர் சமஸையும் என்னையும் கேஎன் சிவராமன் கேள்விகள் கேட்டுப் பேச வைத்தார். நிகழ்ச்சியில் ஒரு வினா – புதிய எழுத்தாளர்களை நீங்கள் எவ்வாறு அடையாளம் காண்கிறீர்கள்? எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? சுமார் இருபதாண்டுகளாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலர் இதனைக் கேட்டுவிட்டார்கள். பதில் மிக...
இந்த வருடம் ஏன் எதுவும் செய்யவில்லை?
ஆண்டுக்கு ஒரு நாவல், ஒரு பெரிய கேன்வாஸ் நான் ஃபிக்ஷன் என்பது என் ஒழுங்கீனங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நானே ஏற்படுத்திக்கொண்ட வழக்கம். சென்ற ஆண்டு அப்படியொன்றும் ஒழுங்கீனம் பொங்கிப் பெருகவில்லை ஆயினும் நாவலை முடிக்க முடியவில்லை. காரணம், வகுப்புகள்-மெட்ராஸ் பேப்பர்-புதிய எழுத்தாளர்களின் புத்தக முயற்சிகள். மாயவலை சீரிஸில் மிச்சமிருந்த புத்தகங்களின் மறு பதிப்புகளைக் கொண்டு வந்தேன்...
மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா
முதலில் எனக்குத் திருமணம் நடந்தது. பிறகு முதல் புத்தகம் வெளிவந்தது. அப்போதெல்லாம் நான் பகுதி நேரம் நல்லவனாகவும் இருந்ததால் போனால் போகிறதென்று என் மனைவி மெனக்கெட்டு ‘மூவர்’ தொகுதிக்கு ஒரு வெளியீட்டு விழா ஏற்பாடு செய்தாள். அக்காலத் தமிழ்ச் சூழலில் என்னைத் தவிர வேறு எவனுக்கும் விழா நடந்த மாலையிலேயே செய்தித் தாளில் புகைப்படத்துடன் செய்தி வந்திருக்க வாய்ப்பில்லை. போதாக் குறைக்கு மறுநாள் காலை...
தனி
மிகவும் உள்ளடங்கிப் போய்க்கொண்டே இருக்கிறேன். சக மனிதர்களிடமிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டுவிடும் வேட்கை என்னையறியாமல் ஆட்கொண்டிருக்கிறது. எவ்வளவு காலமாக இது, ஏன் இது என்பதற்கான காரணம் தெரியும். ஆனாலும் என் இயல்புக்கு எதிரானதொரு பாதையில் தெரிந்தே நடந்துகொண்டிருக்கிறேன். இதை விரும்பிச் செய்கிறேனா என்று தெரியாது. ஆனால் செய்கிறேன். அதில் சந்தேகமில்லை. தற்செயலாக நேற்று என் மொபைல் போனில் யார்...
உண்ணும் கலை
எதிர்ப்பட்ட பெண்ணின் கையில் அரையடி உயரமுள்ள காகிதக் கோப்பை இருந்தது. கண்ணாடி மூடி போட்டு பாதுகாக்கப்பட்டிருந்த அதன் உள்ளே குளிர்ந்த காப்பியும் மேலாக மிதக்கும் ஐஸ் க்ரீமும் தெரிந்தன. நேர் வகிடு எடுத்த தலை மாதிரி அதன் உச்சியில் ஒரு ஓட்டை போட்டு ஸ்டிரா சொருகியிருந்தது. கவனித்ததில் அவள் கால் வாசி கூடக் குடித்திருக்கவில்லை. ஆனால் சுற்றி வரும்போது கையில் காப்பிக் கோப்பை இருக்க வேண்டியது அவசியம். அந்தப்...
12+1 = 1
நீங்கள் இலக்கியம் என்று சொல்லுங்கள். இல்லை என்று மறுத்துப் பேசுங்கள். கவிதை என்று சொல்லுங்கள். சொற்குப்பை என்று தூக்கிக் கடாசுங்கள். வெறும் புலம்பல் என்று சான்றளியுங்கள். காவியச் சுவை கொண்ட கவிதைகள் என்று சிலிர்த்துக்கொள்ளுங்கள். எல்லாம் உங்கள் இஷ்டம். ஆனால் ஒன்றை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும். இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு வந்த தலைமுறைக்குத் (வாசிக்காதவர்களையும் சேர்த்தேதான் சொல்கிறேன்.)...