Categoryபயணம்

முதல் அச்சுக் கூடம்

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கி வார இதழில் பணிக்குச் சேர்ந்தேன். சுமார் முக்கால் மணி நேரம் நாற்காலியில் உட்கார்ந்திருந்துவிட்டு, எழுந்து கீழே உள்ள அச்சுக் கூடத்தைச் சுற்றிப் பார்க்கப் போய்விட்டேன். ஓர் அச்சு இயந்திரத்தைப் பார்ப்பது என்பது அந்நாளில் என் பெருங்கனவாக இருந்தது. இந்த உலகின் வேறு எந்த அதிசயமும் அன்று எனக்கு அவ்வளவு ஆர்வமூட்டக்கூடியதாக இருந்திருக்க...

ரசிகன்

அவன் பெயர் காந்தி பாபு. பெயரைச் சொல்வதைக் காட்டிலும் அவன் ஒரு விஜய் ரசிகன் என்று சொல்லுவதை மிகவும் விரும்புவான். இருக்கலாம். அதிலென்ன தவறு? லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ள ஒரு விஜய்க்கு ஒரு காந்தி பாபுவும் ரசிகனாக இருப்பதில் பிழையில்லை. ஆனால் என்னை அதிர்ச்சியுற வைத்த விவரம், அவன் பகவதி படம் பார்த்து விஜய் ரசிகனானான் என்பது. புதிய கீதையில் அந்த ரசிக மனோபாவம் தீவிரம் கொண்டது என்பது. சமீபத்திய கேரளப்...

ஒரு விளக்கம்

ட்விட்டரில் நண்பர் அலெக்ஸ் பாண்டியன் ஒரு வினாவை எழுப்பியிருந்தார். ராமானுஜரின் காலம் கிபி 1017 – 1137. டெல்லியில் சுல்தான்கள் ஆட்சிக்கு வந்தது, 1192ல். அப்படி இருக்க, 1101-1104 காலக்கட்டத்தில் ராமானுஜர் எந்த டெல்லி சுல்தானைச் சந்தித்திருக்க முடியும்? [ சுட்டி இங்கே] ராமானுஜர் டெல்லி சென்ற சம்பவத்தை விவரிக்கும்போது எனக்கும் இச்சந்தேகம் வந்தது. ராமானுஜர் டெல்லிக்குச் சென்றதாகச் சொல்லப்படும்...

தஞ்சை பயணம்

மூன்று நாள் தஞ்சை பயணம் முடித்து சென்னை வந்து சேர்ந்தேன். பக்திப் பயணமாகத் தீர்மானித்துக் கிளம்பவில்லை என்றாலும் இந்த முறை தஞ்சைப் பயணத்தில் மூன்று திவ்ய தேசங்கள் சேவிக்க முடிந்ததில் மகிழ்ச்சி. கும்பகோணத்தில் ஒப்பிலியப்பன். வெண்ணாற்றங்கரையோரம் உள்ள தஞ்சை மாமணிக் கோயில் (இது த்ரீ இன் ஒன் திவ்யதேசம். நீலமேகப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், நரசிம்மப் பெருமாள் எனத் தனித்தனிக் கோயில்கள். மூன்றும்...

குசலவபுரி என்கிற கோயம்பேடு

வெகு வருஷங்களுக்கு முன்னால் கல்கியில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். ராமேஸ்வரம் போகும் வழியில் ராமர் குரோம்பேட்டைக்கு வந்து தங்கியிருக்கிறார் என்று அழிச்சாட்டியம் பண்ணும் ஒரு மாமாவைப் பற்றிய கதை. இப்போது தோன்றுகிறது. அக்கதை உண்மையில் நடந்ததாகக் கூட இருக்கலாம். கோயம்பேட்டுக்கு சீதை வந்திருக்கும்போது ஏன் குரோம்பேட்டைக்கு ராமர் வந்திருக்க முடியாது?

கொள்ளை கொள்ளும் பூமி

பண்பலை வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், இணையம், மொபைல் அனைத்திலிருந்தும் நான்கு நாள்கள் விடுதலை பெற்று குடும்பத்துடன் கன்யாகுமரிக்குச் சென்றிருந்தேன். நானறிந்த உலகில் குமரியைக் காட்டிலும் மன எழுச்சியும் பரவசமும் அளிக்கக்கூடிய மண் வேறில்லை. கன்யாகுமரி என்னும் தென் முனையை ஒட்டிய சிறு நகரம் ஒரு பெரிய குப்பைத் தொட்டி. சென்னையைக் காட்டிலும் மோசமான பிராந்தியம் அது. அந்தச் சில கிலோ மீட்டர்கள்...

தனியா-வர்த்தனம் 3

அதே கிராண்ட் டிரங்க். அதே முதல் வகுப்பு ஏசி. இரண்டு நாள் டெல்லியின் பேய் மழையை அனுபவித்துவிட்டு [பள்ளங்களிலெல்லாம் மாருதி கார்கள் மிதக்கின்றன – உபயதாரர்: காமன்வெல்த் போட்டிகள் – மந்திரிமார்கள் செல்லும் ராஜபாதைகளைத் தவிர மற்ற பிராந்தியமெல்லாம் அடித்த மழையில் அடையாளம் தெரியாத அளவுக்கு நாறிக்கிடக்கின்றன. ஒரே நாளில் 11 செண்டிமீட்டர்.] நான் போன ஜோலியையும் முடித்துக்கொண்டு திரும்பும்போது ஒரு நல்ல...

தனியா-வர்த்தனம் 2

விடிந்ததும் பல் தேய்த்து, காப்பி சாப்பிட்டுவிட்டுத் தூங்கிவிட முடிவு செய்திருந்தேன். மாவோயிஸ்டுகளும் ரயில் கொள்ளையரும் காலைப் பொழுதை அநேகமாக எதற்கும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றொரு எண்ணம். அவ்வண்ணமே படுக்கையை விரித்து, இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்தும் விட்டேன். ஒரு சில நிமிடங்களில் அந்த தடதட சத்தம் ஆரம்பித்துவிட்டது. புத்திக்குள் பல்ப் எரிந்தது. மகனே இது வடவர் தேசம். இங்கே ரிசர்வ்ட்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter