Categoryஎழுத்தாளர்கள்

அசோகமித்திரன் – மூன்று குறிப்புகள்

அசோகமித்திரனைப் பற்றிய முதல் அறிமுகம் எனக்கு ம.வே. சிவகுமார் மூலம் கிடைத்தது. ‘ஒரு வருஷம் டைம் ஃப்ரேம் வெச்சிக்கடா. வேற யாரையும் படிக்காத. அசோகமித்திரன மட்டும் முழுக்கப் படி. சீக்கிரம் முடிச்சிட்டன்னா, ரெண்டாந்தடவ படி. அவரப் படிச்சி முடிச்சிட்டு அதுக்கப்பறம் எழுதலாமான்னு யோசிக்க ஆரம்பி’ என்று சிவகுமார் சொன்னார். உண்மையில் அசோகமித்திரனை முழுக்கப் படிக்கும் ஒருவருக்கு எழுதலாம் என்ற எண்ணம் இருந்தால்...

அஞ்சலி: கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார்

புத்தகக் காட்சியில் ஞாநி ஸ்டால் வாசலில் சிவகுமார் அமர்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும் சட்டென்று இழுத்து அருகே உட்காரவைத்து, ‘அப்றம்? எளச்சிட்டாப்டி?’’ நான் இளைத்த கதையைச் சொல்லிக்கொண்டிருந்தபோது அழகியசிங்கரிடம் இருந்து போன் வந்தது. விருட்சத்தின் 101வது இதழை வெளியிட வரவேண்டும் என்று சொன்னார். ‘சிவா, மௌலி கூப்பிடறார். விருட்சம் வெளியிடணுமாம். வாயேன்கூட.’ அன்று விருட்சத்தின் 101வது இதழை நான்...

லா.ச.ரா : அணுவுக்குள் அணு

லாசரா எனக்கு முதல் முதலில் அறிமுகமானபோது நான் விவேக் ரூபலாவின் கொலைவெறி ரசிகனாக இருந்தேன். பத்தாம் வகுப்பு முடித்திருந்த நேரம். எங்கள் பேட்டையில் அப்போது இருந்த லீலா லெண்டிங் லைப்ரரியில் தினமும் ஒரு கிரைம் நாவலை எடுத்துப் படிப்பது என்பதை ஒரு சமூகக் கடமையாக நினைத்தேன். சுஜாதாவெல்லாம் என்னைக் கவரவில்லை. ராஜேஷ்குமார்தான். உலகின் ஒரே உன்னத எழுத்து என்றால் அது அவரது க்ரைம் நாவல்தான். அத்தகு ரத்த தினம்...

எலி அறியும் மசால்வடைகள்

சாரு நிவேதிதாவின் இந்தக் கட்டுரையை இப்போதுதான் வாசித்தேன். பத்திரிகைத் துறை முன்னைக்காட்டிலும் வேகமாக மோசமாகிக்கொண்டிருக்கிறது போலிருக்கிறது. அதிர்ஷ்டவசமாகச் சிறிது காலமாகப் பத்திரிகை எழுத்திலிருந்து ஒதுங்கியிருப்பதால் என்னளவில் பாதிப்பின்றி இருக்கிறேன். சந்தடி சாக்கில் ஒரு சேதி சொல்லிவிடுகிறேன். ஓரிரு மாதங்கள் முன்னர் ஒரு பத்திரிகையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. விழா கொண்டாடுகிறோம்;...

சிங்கிள் டீ

ராயப்பேட்டை ஒய்யெம்சியே மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு இரண்டு நாள் சென்றேன். முதல் நாள் சுமார் ஒரு மணிநேரம். இரண்டாம் முறை சென்றபோது சுமார் மூன்று மணி நேரம்.

இ.பாவின் வலைப்பதிவு

‘….வாருங்கள். சாப்பிடப் போவோம்’ என்று சொல்லிக்கொண்டே முன் சென்றார் முதல் அமைச்சர் என்.டி.ஆர்.
“இதுதான் காலம்சென்ற என் மனைவி. இவளை வணங்கிவிட்டுத்தான் என் காலைப் பணிகளைத் தொடங்குவேன்”என்று சொல்லிக் கொண்டே அவ்வண்ணப் படத்தெதிரே மெய்ம்மறந்து சில விநாடிகள் நின்றார் அவர்.
‘A pity!!. எனக்குப் பார்வை இல்லை’ என்றார் ஹக்ஸர்.
‘அகக்கண்ணால் பாருங்கள், தெரியும்’ என்றார் என்.டி.ஆர் உரக்க சிரித்துக் கொண்டே.

கொண்டாட ஒரு தருணம்

நல்லி செட்டியாருக்கு என்று அறிவிக்கப்பட்டாலும் தமிழர்கள் ஜீரணித்துவிடுவார்கள் என்றாலும், நாஞ்சில் நாடனுக்கு இவ்வாண்டு சாகித்ய அகடமி விருது என்னும் அறிவிப்பு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. நாஞ்சிலுக்கு அன்பான வாழ்த்துகள். தலைகீழ் விகிதங்கள் தொடங்கி நாஞ்சில் நாடனின் ஒரு படைப்பையும் நான் விட்டதில்லை. நமக்கே நமக்கென்று அந்தரங்கமாகச் சில விஷயங்கள் எப்போதும் இருக்குமல்லவா...

நீயெல்லாம் ஒரு இலக்கியவாதியா?

சில காலம் முன்னர் பத்ரி ஒருமுறை என்னிடம், ‘உங்கள் வலைப்பதிவின் சைட் பாரில்  நானொரு இலக்கியவாதி இல்லை என்று  கட்டம் கட்டிப் பெரிதாகப் போடுங்கள்’ என்று சீரியஸாகச் சொன்னார். செய்வதில் எனக்குப் பெரிய ஆட்சேபணை ஒன்றுமில்லை. அநாவசியமான சில விவாத விதண்டாவாதங்களைத் தவிர்க்கலாம் என்பதால்தான் செய்யவில்லை. எனக்கு இலக்கியம் பிடிக்கும். படைக்க அல்ல. படிக்க. அதுதான் என் எழுத்துக்கு வலு சேர்ப்பது. கொஞ்சகாலம்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி