ஞாநியின் ‘ஓ பக்கங்கள்’ – பாகம் 3 இம்முறை கிழக்கு வெளியீடாக வருகிறது. விகடனில் ஏன் இப்போது ஞாநி எழுதுவதில்லை என்று இப்போதுகூட என்னிடம் சிலர் [என் உறவினர்களும்கூட] கேட்பதுண்டு. அவர்களுக்கு என் பதில், ‘குமுதத்தில் இப்போது எழுதுகிறார், படியுங்கள்’ என்பதுதான். விகடனிலிருந்து தாம் வெளியேறிய சூழல் பற்றி இந்தத் தொகுப்பில் ஞாநி எழுதியுள்ள பகுதியிலிருந்து சில வரிகள் கீழே. நேற்றைய கிழக்கு மொட்டை...
சில புதிய புத்தகங்கள் – 1
இணையத்தில் எழுதி இரு வாரங்களாகின்றன. உருப்படியாக எழுதி மூன்று மாதங்களுக்கு மேல். சென்னை புத்தகக் கண்காட்சி நெருங்குவதுதான் காரணம். வேலைகள் அதிகம். இருப்பினும், கண்காட்சிக்கென நாங்கள் வெளியிடும் புத்தகங்களுள் குறிப்பிடத்தக்க சிலவற்றைப் பற்றி இங்கே சிறு அறிமுகங்கள் செய்யலாம் என்றிருக்கிறேன். கண்காட்சியில் என்னுடைய புதிய நூல்கள் மூன்று இடம்பெறுகின்றன. 1. மாயவலை 2. Excellent. 3. ஆயில் ரேகை. ஆயில்...
ஒரு முக்கியமான புத்தகம்
அமெரிக்க அதிபராகத் தேர்வு பெற்றிருக்கும் பராக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறினூடாக அமெரிக்கக் கருப்பர் இன சரிதம். தகவல் துல்லியம், சுருக்கம், தெளிவு. மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதியிருக்கிறார் ஆர். முத்துக்குமார். அமெரிக்கத் தேர்தல் முறை பற்றி தமிழக வாசகர்களுக்கு இருக்கக்கூடிய குழப்பங்கள் இந்தப் புத்தகத்தினால் தீரும். டிசம்பர் 6, 2008 அன்று இந்நூல் மதுரை புத்தகக் கண்காட்சியில்...
ஓர் அறிவிப்பு
எங்களுடைய நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் வெளியீடுகளான சில புத்தகங்களை, விருப்பமுள்ள வாசகர்களுக்கு – மதிப்புரை எழுதுவதற்கென இலவசமாக வழங்க முடிவு செய்திருக்கிறோம். இது பற்றிய விரிவான தகவல்களை நீங்கள் பத்ரியின் வலைப்பதிவில் காணலாம். பின்வரும் புத்தகங்கள் முதல் கட்டமாக இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன: 1. நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா 2. ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் –...
கிழக்கு ப்ளஸ் – 10
இந்தச் சிறு தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல்கள்மூலம் கிழக்கின் வளர்ச்சியின்பால் வாசகர்களுக்கு உள்ள அக்கறையும் ஆர்வமும் தெரிகிறது. அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது பேசிய சில விஷயங்களை நான் முன்பே பேசியிருந்தால் பல மனக்கசப்புகளை – இணையத்தில் தவிர்த்திருக்கலாமே என்று சில நண்பர்கள் கேட்டார்கள். என் பதில் இதுதான். பேசுவது என்...
கிழக்கு ப்ளஸ் – 9
அந்தப் புத்தகக் கண்காட்சியை மறக்கமுடியாது. கிழக்கு ஆரம்பிப்பதற்கு முந்தைய வருட சென்னை புத்தகக் கண்காட்சி. நானும் பத்ரியும் கூட்டத்தில் நீந்தியபடி ஒவ்வொரு கடையாக நகர்ந்துகொண்டே இருக்கிறோம். புத்தி முழுக்க விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய புத்தகங்களின் மீதுதான். என்னென்ன வகைகள், என்னென்ன விதங்கள், யார் யார் எழுத்தாளர்கள், லே அவுட் எப்படி, பேகேஜிங் எப்படி, எப்படி விற்கிறது, எதை எடுக்கிறார்கள்...
கிழக்கு ப்ளஸ் – 8
புத்தகம் என்று பேசத் தொடங்கும்போதே பத்து மொழிகள் என்று முடிவு செய்துவிட்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் NHM. என்றைக்கு முடியும், எப்படி முடியும் என்றெல்லாம் அதிகம் நாங்கள் கவலைப்படவில்லை. எப்படியும் முடியும் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. புத்தகங்களைப் பொறுத்த அளவில், சரியான எடிட்டர்கள் அமையும்போது எந்த மொழிக்கும் செல்லமுடியும். என்னவேண்டுமானாலும் செய்யவும் முடியும். இதுதான் அடிப்படை. இது ஒன்றுதான்...
கிழக்கு ப்ளஸ் – 7
இருபத்தி ஐந்து ரூபாய். இதற்குமேல் இருபத்தி ஐந்து பைசா கூட விலை இருக்கக்கூடாது என்பதுதான் Prodigy தொடங்கியபோது நாங்கள் வகுத்துக்கொண்ட முதல் விதி. சிறுவர்களும் குழந்தைகளும் வாங்கிப்படிக்க வேண்டும். என்றால், அவர்கள் வாங்கக்கூடிய விலையில் இருக்கவேண்டும். அது முடியாதபட்சத்தில் செய்யாமலேயே இருக்கலாம். இரண்டாவது, சிறுவர்களும் குழந்தைகளும் விரும்பக்கூடிய தரத்தில் புத்தகம் அமையவேண்டுமென்பது. உண்மையில்...
கிழக்கு ப்ளஸ் – 6
முதல் வருடம் ஐம்பது புத்தகங்கள். இரண்டாம் வருடம் இன்னொரு ஐம்பது. இடைப்பட்ட எழுநூறு தினங்களில் சுமார் ஐந்தாறு புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று வந்தோம். அனுபவம். நானும் பத்ரியும் பொதுவாக புத்தகக் கண்காட்சியில் அப்போதெல்லாம் உட்காருகிற வழக்கம் இல்லை. எங்கள் ஸ்டாலில் அநேகமாக இருக்கவே மாட்டோம். ஆளுக்கொரு திசை பிரித்துக்கொண்டு மற்றக் கடைகளில்தான் சுற்றிக்கொண்டிருப்போம். மிகப்பெரிய பதிப்பாளர்கள் முதல்...
கிழக்கு ப்ளஸ் – 5
இதனை வழக்கமான கட்டுரை வடிவில்தான் வெளியிட நினைத்தேன். இன்று காலை பத்ரியின் வலைப்பதிவில் காண நேரிட்ட இந்த ஸ்லைட் ஷோ உத்தி என்னைக் கவர்ந்ததால், கேட்டு கற்றறிந்து அதனை முயற்சி செய்திருக்கிறேன்.கிழக்கு, வரம், நலம், Prodigy ஆசிரியர் குழுவில் உள்ளோருக்கு நாங்கள் வகுத்தளித்திருக்கும் அடிப்படை விதிகள் இவை. அனுபவங்களுக்கேற்ப அவ்வப்போது இதில் சேர்க்கைகள் நிகழ்வது வழக்கம். கிழக்கு ப்ளஸ் – பகுதி...