இந்தப் பையன் நன்றாக எழுதுகிறான். சிறுகதைகளைப் படித்துப் பார்த்தேன், உருக்கமாக, நன்றாக உள்ளன. பிரசுரித்து ஊக்குவிக்க முடியுமா பார் என்று ஒரு துண்டுத் தாளில் எழுதிக் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் அசோகமித்திரன். ஈர்க்குச்சிக்கு மூக்குக் கண்ணாடி போட்ட மாதிரி என்னெதிரே நின்றுகொண்டிருந்த முத்துராமனுக்கு அப்போது அதிகம் போனால் இருபது வயதுதான் இருக்கும். ஆதிகால மணிரத்னம் படங்களில் இடம்பெற்ற வசனங்களை...
எழுதுபவர்களும் எழுத்தாளர்களும்
ஓர் எழுத்தாளன் எவ்வாறு உருவாகிறான் என்று எளிதில் சொல்ல முடியாது. எல்லோருக்கும் சொல்ல விஷயங்கள் உண்டு. எல்லோரும் ஏதோ வகையில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். கடிதங்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதுகிறோம், பத்திரிகைகளுக்கு அனுப்புகிறோம், வலைப்பதிவுகள் எழுதுகிறோம், டிவியில், சாத்தியமுள்ள அனைத்து ஊடக முறைகளையும் பயன்படுத்துகிறோம். ஆனால் எழுதுபவர் என்கிற படியிலிருந்து எழுத்தாளர் என்னும் படிக்குச்...
எழுத்தாளர்களின் ராயல்டி
முன்னர் சாரு. இப்போது ஜெயமோகன். இரண்டு முக்கியமான எழுத்தாளர்கள் தமது புத்தகங்களின் விற்பனை குறித்தும், கிடைக்கும் ராயல்டி பற்றியும் மனம் திறந்து எழுதியிருக்கிறார்கள். [ஆக, இந்தக் கிசுகிசுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை, இந்த இரு எழுத்தாளர்களைப் பொருத்த அளவில் பொய்யானது என்பது உறுதியாகிறது.] ஆண்டிறுதியில் இவர்கள் நடத்தும் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு முண்டியடிக்கிற கூட்டம், நிகழ்ச்சிக்குக்...
சிறுகதைப் பயிலரங்கம் – சில குறிப்புகள்
உரையாடல் அமைப்பின் சிறுகதைப் பயிலரங்கில் நேற்று கலந்துகொண்டேன். தமிழ்நாட்டில் சிறுகதை பயில நூறு பேர் பணம் கட்டி வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பது வியப்பல்ல; மகிழ்ச்சி. சில வருடங்களுக்கு முன்னர் தமிழோவியத்தில் புனைகதைகளின் எதிர்காலம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கதைகளில் இருந்து கதையல்லாத எழுத்தை நோக்கி நகர்வது பரிணாம வளர்ச்சி என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். கொஞ்சம் தீவிரமான சர்ச்சைகளை...
நினைக்காத நாளில்லை
என்றும் நினைக்க வேண்டும். இன்றாவது நினைக்கலாம். மகாகவி பாரதி நினைவு தினம் இன்று [செப் 11].
எனவே இன்றொருநாள் குறுங்குடிலில் என் வெண்பாம் இம்சைகள் இருக்காது.
Prodigy பயிலரங்கம் [1]
எழுதுவது தொடர்பாகச் சொல்லிக்கொடுக்கப்படும் விஷயங்களால் பத்து பைசா பிரயோஜனமில்லை என்பது என் கருத்து. எனக்குப் பல பேரிடம் கற்றுக்கொள்ளச் சென்ற அனுபவமும் உண்டு; எழுத்துப் பயிலரங்குகளில் வகுப்பெடுத்த அனுபவமும் உண்டு. கிழக்கு ஆரம்பிக்கப்பட்ட பிறகு இந்தப் பயிலரங்கு நடவடிக்கைகள் அடிக்கடி என் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றன. விதியை வெல்ல யாராலும் முடியாது. எப்படி எழுதலாம், அல்லது எப்படி எழுதவேண்டும் என்கிற...
அம்பைக்கு இயல் விருது
2008ம் ஆண்டுக்கான இயல் விருது தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் போன்றவர்களைத்...
ரயில் வண்டிகளின் மகாராஜா
வாழ்வில் நம்மையறியாமல் நேர்ந்துவிடுகிற சில அபத்தங்கள்கூட சமயத்தில் சரித்திர முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. என்னைப் பொருத்தவரை, அ. முத்துலிங்கத்தை நான் வாசிக்கத் தவறவிட்டது ஒரு மிக முக்கியமான அபத்தம். எப்படி விட்டேன், எப்படி விட்டேன் என்று இப்போது உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் பல காரணங்கள் தோன்றுகின்றன. எல்லாமே அந்தந்தத் தருணங்களுக்குப் பொருத்தமானதாகவும் சரியானதாகவுமே இருந்திருக்கின்றன...