இட்லிவடைக்கு இன்று பிறந்தநாள் என்று அறிந்தேன். வாழ்த்துகள். இணையத்தில் அநாமதேயம் என்பதன் சுவாரசியம் மறைந்து வெகுநாள் ஆகிவிட்டது. யாராயிருந்தால் என்ன, சரக்கு எப்படி என்கிற மனநிலைக்கு வாசகர்கள் பழகிவிட்டார்கள். இட்லிவடை யார் என்ற கேள்வி இன்று பெரும்பாலும் எழுவதில்லை. இட்லிவடைக்குப் பிறகு உதித்த பேயோன், தனது முன்னோர்களின் அனைத்து அருமை பெருமைகளையும் அடித்துக்கொண்டு போய்விட்டார். அவரது பாதிப்பில்...
சிலேட்டுமப் படலம்
இன்று தொடங்கி எனது இத்தளத்தில் ‘ஸ்லேட்’ என்னும் புதிய சந்து திறக்கப்படுகிறது. இதுநாள் வரை ட்விட்டரில் நான் செய்துவந்தவற்றை இனி இங்கே செய்ய உத்தேசம். ஒரு புத்தகமாகத் தொகுக்கலாம் என்று நினைத்தால்கூட ட்விட்டரில் தேடித்தொகுப்பது பெரும்பாடாயிருக்கிறது. எழுதுபவை அனாமத்தாக வீணாவது பொறுக்கவில்லை. எனவே வாசகர்கள் / நண்பர்கள் இப்பக்கத்திலேயே என் ட்வீட்களுக்கு பதிலளிக்கலாம். விவாதிக்கலாம். அங்கு செய்யும்...
விரதம் எனும் புரதம்
நண்பர்களுக்கு விஜயதசமி தின நல்வாழ்த்துகள். இந்த வருட நவராத்திரி எனக்குச் சற்று ஸ்பெஷல். பன்னெடுங்காலம் முன்னர் லாசரா ஒருமுறை நவராத்திரி விரதம் குறித்துச் சொன்னார். நவராத்திரியோ, சிவராத்திரியோ ஏதோ ஒரு சாக்கு. விரதம் நல்லது. உண்ணாதிருப்பது அனைத்திலும் நல்லது. ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, இருவேளை குளித்து பூஜை செய்து, செய்யும் தொழில்தவிர வேறெதையும் நினையாதிருந்து பார் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்...
படம் காட்டல்
மதி நிலையம் வெளியீடாக வந்துள்ள எனது நான்கு நூல்களின் அட்டைப்படங்கள் இப்போது கிடைத்தன. அவையாவன:
மலிவு விலையில் மாயவலை
சில காலமாகப் பதிப்பில் இல்லாமல் இருந்த என்னுடைய பல புத்தகங்கள் இப்போது மதி நிலையம் வாயிலாக மறு பதிப்பு காண்கின்றன.
பாகிஸ்தான் அரசியல் வரலாறு, தாலிபன், யானி, உணவின் வரலாறு, கொலம்பிய போதை மாஃபியா [என்பெயர் எஸ்கோபர்] ஆகியவை இப்போது வெளியாகியிருக்கின்றன. 9/11: சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சியும் மாயவலையும் அடுத்தபடியாக வெளிவரவிருக்கின்றன.
மனெ தேவுரு
இன்னொரு மொழி சீரியலுக்கு நான் வசனம் எழுதுவேன் என்று எண்ணிப் பார்த்ததில்லை. விரைவில் உதயா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘மனெ தேவுரு’ [குல தெய்வம்] தொடருக்கு என்னை எழுத எம்பெருமான் பணித்தான். நேற்று பெங்களூரில் அதற்கான பூஜை, முதல் நாள் படப்பிடிப்பு. கலந்துகொண்டு திரும்பினேன்.
கோன் ஐஸ் பூதம்
பத்திரிகைகளுக்கு எழுதி வெகுகாலம் ஆகிவிட்டது. அதுவும் குழந்தைகளுக்குக் கடைசியாக எழுதி ஐந்தாறு வருடங்கள் தாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். கடைசியாக கோகுலத்தில்தான் ஒரு தொடர் எழுதினேன். புதையல் தீவு.
பெரிய இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் கோகுலத்தில் ஒரு சிறுவர் தொடர்கதை ஆரம்பிக்கிறேன். கோன் ஐஸ் பூதம் குறித்து இம்மாத கோகுலத்தில் வெளிவந்திருக்கும் அறிவிப்பு கீழே. அடுத்த இதழில் கதை ஆரம்பமாகிறது.
மயான ராசி
O பா. ஜகந்நாதன்
எனக்கு இந்த வீடு ,பிளாட்’டுன்னு வாங்க அலையறது சுத்தமா பிடிக்காது சார். ஆனா,ரொம்ப நாளாவே ,ஒரு வீடோ ,மனையோ வாங்கணும்கறது என் பொண்டாட்டியோட ஆசை. “எந்த ஏரியால யார் பிளாட் போட்ருக்காங்க? என்ன ரேட்?யாரு பில்டர்?”….. எல்லாம் அவளுக்கு அத்துப்படி! அவள் ஒரு நடமாடும் “சுலேகா.காம்”.
பாபர் நாமா
முகலாய மன்னர் பாபரின் நினைவுத் தொகுப்பு நூலான பாபர் நாமா தமிழில் வெளியாகியிருக்கிறது. இதன் ஆங்கில வழித் தமிழாக்கத்தைச் செய்திருப்பவர் என்னுடைய தந்தை.
கிலி மார்க்கெட்டிங்
ஜகந்நாதன் இன்று எழுதி அனுப்பியது: காலை மணி பத்து. ஆபீஸ் பரபரப்பில் நான் . என் செல்போன் சிணுங்கியது. “குட் மார்னிங் சார் “… என்று ஒரு குயில் என் பெயரை சொல்லி செல் போனில் குழைந்தது. எஸ்…இட்ஸ் மீ ..ஸ்பீக்கிங் … என்றேன் பெருமையாக. “சார், We are calling from UCICI Brudancial Insurance company சார்…” ச்சே! காலங்காத்தாலேயே இன்சுரன்சா? இறைவா, இந்த துயரத்திலேந்து மீளரதுக்கு ஏதாவது...