வலை எழுத்து

வெயிலோடு விளையாடு

சென்னையில் வெயில் வாட்டத் தொடங்கிவிட்டது. இம்மாதமும் அடுத்த மாதமும் எப்படிப் போகப்போகிறது என்றே தெரியவில்லை. இப்போதே ஆங்காங்கே வெயில் சார்ந்த வியாதிகள் தலையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இம்முறை சென்னைவாசிகள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். நலம் வெளியீடுகளின் ஆசிரியர் ஆர். பார்த்தசாரதி, தமிழ் பேப்பரில் கத்திரிக் குறிப்புகள் எழுதியிருக்கிறார். இதெல்லாம்...

கஸ்தூரி ரங்கன்

தினமணியின் முன்னாள் ஆசிரியரும் கணையாழியின் நிறுவனருமான கி. கஸ்தூரிரங்கன் இன்று காலை காலமானார். சிலபேருடைய மறைவு வார்த்தையளவில் பேரிழப்பு. கஸ்தூரி ரங்கனின் மறைவு நான் உள்பட பலருக்கு வாழ்க்கையளவில் பேரிழப்பு.
விரிவாக எழுதுமளவுக்குத் தற்போது மனநிலை சுமூகமாக இல்லை. அவருக்கு அஞ்சலிகள்.

மானம் போகும் பாதை

உலகிலேயே மிகவும் கஷ்டமான காரியம் எது? என்னைக் கேட்டால் காய்கறி வாங்குவதுதான் என்று சொல்வேன். இது அத்தனை துல்லியமான பதில் இல்லை. இன்னும் சரியாகச் சொல்லுவதென்றால் மனைவி குறை கண்டுபிடிக்காதபடிக்குக் காய்கறி வாங்குவது. திருமணமாகி ஒரு முழு வனவாசகாலம் கடந்துவிட்ட பிறகும் இந்தக் கலையில் நான் ஒரு பெரிய இந்திய சைபர் என்பது என் மனைவியின் தீர்மானம். அநேகமாக இதைப் படித்துக்கொண்டிருக்கும் அத்தனை உத்தமோத்தமக்...

ஒசாமா, அமெரிக்கா, மற்றுமொரு தோழர்

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டிருக்கிறார். பத்து வருட காலம் அமெரிக்கப் படைகள் காடு மலையெல்லாம் தேடித் திரிந்ததற்குப் பலன். பாகிஸ்தான் உளவுத் துறையின் உதவியில்லாமல் இது சாத்தியமாகியிருக்காது என்பது குழந்தைக்கும் தெரியும். எத்தனை பில்லியன் அல்லது ட்ரில்லியன் டாலர் பேரம் என்பதெல்லாம் காலக்ரமத்தில் விக்கிலீக்ஸில் வெளிவரலாம்.

ஒன்றா, ரெண்டா ஆசைகள்?

சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை என் தாத்தா பேச்சுவாக்கில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்ததைத் தற்செயலாகக் கேட்டேன். இன்னும் காதுகளை விட்டு அகலாமல் அப்படியே தங்கிவிட்டது அது. சொல்லப்போனால் திராவிட இயக்கம் என்கிற பதம் எனக்கு அறிமுகமானதே, அதிலிருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு இரண்டு பெண்டாட்டிகள் உண்டு என்பதாகத்தான். அப்படித்தான் என் தாத்தா சொன்னார்.

தாத்தா சாஹேபுக்கு தாதா சாஹேப்

எனக்கு பாலசந்தர் படங்கள் பிடிக்காது என்று சொல்வது தீவிர சினிமா ரசிகர்களிடையே [இவர்கள் பெரும்பாலும் இலக்கியவாதிகளாகவும் இலக்கியவாதிகளாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறவர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் அங்ஙனம் காட்டிக்கொள்ள விரும்புவோராகவும் இருப்பார்கள்.] ஒரு ஃபேஷன். ஒன்றுக்கு இரண்டு முறை தனியே உட்கார்ந்து ரசித்துப் பார்த்துவிட்டுத்தான் இதை அவர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அந்தப் பிரச்னை...

எத்தனைக் கோடி இம்சை வைத்தாய்!

பொதுவாக எனக்கு டாக்டர், மருந்து, இஞ்செக்‌ஷன் என்றால் கொஞ்சம் அலர்ஜி. குறிப்பாக அவர் என்னத்தையாவது எழுதிக்கொடுத்து போய் டெஸ்ட் எடுத்துக்கொண்டு வா என்று சொல்லிவிடுவாரேயானால் குலை நடுங்கிப் போய்விடும். எதோ நாம்பாட்டுக்கு எம்பெருமானே என்று இருக்கிற ஜோலியைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம், டெஸ்ட் எடுக்கிறேன் பேர்வழி என்று வாங்கும் பணத்துக்கு வஞ்சனையில்லாமல் கச்சாமுச்சா இங்கிலீஷில் கண்ட வியாதி வெக்கைகளைக்...

ஜெய் ஸ்ரீராம்!

சோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் துக்ளக்குக்கும் எனக்கும் சில ஜென்மாந்திரத் தொடர்புகள் உண்டு. தில்லி சுல்தான் துக்ளக். தன் வாழ்நாளில் அதிகபட்சம் மூன்று முறைக்குமேல் அவர் தலைநகரை மாற்றியதில்லை. ஆனாலும் ஏனோ அந்த ஜீவாத்மாவை நினைவுகூரும் போதெல்லாம் எப்பப்பார் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்கிறவர் என்று நமக்குத் தோன்றிவிடுகிறது. எல்லாம் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் சதி...

கொள்ளை கொள்ளும் பூமி

பண்பலை வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், இணையம், மொபைல் அனைத்திலிருந்தும் நான்கு நாள்கள் விடுதலை பெற்று குடும்பத்துடன் கன்யாகுமரிக்குச் சென்றிருந்தேன். நானறிந்த உலகில் குமரியைக் காட்டிலும் மன எழுச்சியும் பரவசமும் அளிக்கக்கூடிய மண் வேறில்லை. கன்யாகுமரி என்னும் தென் முனையை ஒட்டிய சிறு நகரம் ஒரு பெரிய குப்பைத் தொட்டி. சென்னையைக் காட்டிலும் மோசமான பிராந்தியம் அது. அந்தச் சில கிலோ மீட்டர்கள்...

நீலக்காகம் 3

விறகுத் தொட்டிக்காரர், வீட்டை விட்டுக் கிளம்பும்போது காகம் கரைந்தது. ஒரு கணம் நின்றார். திரும்பி உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார். ‘இவளே, உன் தம்பி வாராப்புல இருக்கு. ஆழாக்கு அரிசி கூடப் போட்டு சமைச்சிரு’ விசாலாட்சி திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்தாள். காகம் கரையும்போதெல்லாம் தம்பி வருவது வழக்கமாகியிருக்கிறது. இன்று நேற்றல்ல. திருமணமான நாளிலிருந்து இது நடக்கிறது. தற்செயலா, திட்டமிடப்பட்டதா...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!