இந்தக் குறிப்பை ஃபேஸ்புக்கில் எழுதினேன். இங்கே சேகரித்து வைக்கிறேன். அவ்வளவுதான். கடந்த மூன்று மாதங்களாக இங்கே நான் எழுதும் எந்த ஒரு குறிப்பும் ஐம்பது பேருக்கு மேலே சென்று சேராமல் இருந்தது. எப்போது நான் என்ன எழுதினாலும் – அது நட்ட நடு ராத்திரியாகவே இருந்தாலும் முதல் காரியமாக எழுந்து உட்கார்ந்து படித்து, லைக் போட்டுவிட்டுப் பிறகு இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கத் தொடங்கும் நண்பர்களுக்குக்...
சொல்லாமல் சொல்லிவைத்த பாடம்
உவேசா முன்னுரைகள் என்ற சிறிய தொகுப்பு நூல் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அவர் பதிப்பித்த சில புராதன இலக்கியப் பிரதிகளுக்கு எழுதிய முன்னுரைக் குறிப்புகளைக் கொண்ட நூல் இது. சிறுபாணாற்றுப்படை அதிலொன்று. //சிறுபாணாற்றுப்படை என்பது நக்கீரர் முதலிய கடைச் சங்கப் புலவர்களால் இயற்றப்பட்டு, அவர்களால் தொகுக்கப்பெற்ற பத்துப் பாட்டினுள், மூன்றாவதாக உள்ள ஒரு நேரிசை ஆசிரியப்பா. இஃது இருநூற்றுப் பத்தொன்பது...
நானொரு மாண்டேக் சிங் அலுவாலியா
ஒவ்வொரு புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பும், அதற்கு முந்தைய டிசம்பரில் அடுத்த ஒரு வருடத்துக்கான திட்டங்களை எழுதுகிறேன். இந்தத் திட்டம் எழுதும் பணி என்பது ஒரு நாவல் எழுதுவதினும் கடினமானது, கவனம் கேட்பது. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப் போராளி மனநிலையுடன்தான் இச்செயலில் ஒவ்வொரு முறையும் ஈடுபடுகிறேன். அந்தத் தீவிரத்தை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது, நீங்கள் என்னை நிகர்த்த அல்லது என்னைக் காட்டிலும்...
பாடசாலை (சிறுகதை)
கணேசன் வீட்டுக்கு வரும்போதே ஏதோ சரியில்லை என்று கௌசல்யாவுக்குத் தெரிந்துவிட்டது. என்ன, என்னவென்று நச்சரிக்கத் தொடங்கினால் சொல்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வான். உண்மையிலேயே ஏதாவது பெரிய பிரச்னையாக இருக்கும்பட்சத்தில் எரிச்சலும் கோபமும் அதிகரித்து, ஒரு கட்டத்தில் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. எனவே அவனாகப் பேசுகிற வரை முகத்தை வைத்துத் தான் எதையும் கண்டுபிடித்துவிடவில்லை என்கிற பாவனையைத்...
இது போதும்
நேற்று டிஸ்கவரி வேடியப்பன் அழைப்பின் பேரில் ஆண்டிறுதி புத்தக இரவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். நண்பர் சமஸையும் என்னையும் கேஎன் சிவராமன் கேள்விகள் கேட்டுப் பேச வைத்தார். நிகழ்ச்சியில் ஒரு வினா – புதிய எழுத்தாளர்களை நீங்கள் எவ்வாறு அடையாளம் காண்கிறீர்கள்? எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? சுமார் இருபதாண்டுகளாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலர் இதனைக் கேட்டுவிட்டார்கள். பதில் மிக...
நன்றி கெட்டவன் வாக்குமூலம்
நேற்றைய கலவரத்துக்கு சாட்சி ஆனவர்களுக்கு ஒரு சொல். அச்சுப் புத்தகம் – கிண்டில் இரண்டையும் நான் சமமாக மதிப்பவன் என்பது உங்களுக்குத் தெரியும். அச்சு நூல்களைக் காட்டிலும் கிண்டில் புத்தகங்களின் விலை ஏன் குறைவாக இருக்கிறது; எதனால் அதில் வாசிப்பது நல்லது என்று என்னைவிட விரிவாக எழுதிய இன்னொரு எழுத்தாளர் இங்கே கிடையாது. கிண்டில் என்பது காலக்கட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய வந்திருக்கும் ஒரு நவீன...
காவ்யகுமாரி
உயிர்மை இதழில் என் புதிய சிறுகதை காவ்யகுமாரி வெளியாகியுள்ளது. எல்லாம் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் நடந்து, சென்ற வாரம் திருமணமும் முடிந்துவிட்டது. கஜகஸ்தான் சிட்டிபாபு மூன்று நாள் விடுப்பில் வந்து திருமணத்தை நடத்திவிட்டு, அம்மாவையும் தங்கச்சியையும் பொறுப்போடு பார்த்துக்கொள் என்று மென்பொருள் சங்கருக்கு புத்திமதி சொல்லிவிட்டுத் திரும்பவும் கஜகஸ்தானத்துக்குப் போய்ச் சேர்ந்தார். இங்கே...
எழுதும் மனநிலை – சில குறிப்புகள்
தினமும் எழுதுவது நல்லதல்ல. எழுத்து சடங்கல்ல. நிறைய எழுதுவது நல்லதல்ல. நீர்த்துவிடும். ஆரம்பித்தால் முடித்தே தீரவேண்டும் என்பது அவசியமல்ல. சுயமாக ஏற்படுத்திக்கொண்டாலும் ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் எழுதினால் நன்றாக வராது. ஆர்வம் எந்தத் திசையில் போகிறதோ, அதனைப் பின் தொடர்வதே நல்லது. நல்ல எழுத்து கட்டுப்பாடுகளுக்கு உட்படாதது. இவையும், இவற்றை நிகர்த்த இன்னும் பல அறிவுரைகளும் எழுதுவது தொடர்பாகப் பல...