துறைசார் அனுபவங்களில் புனைவேற்றி நாவல் எழுதும் வழக்கம் உலக இலக்கியத்தில் ஏற்கெனவே உண்டுதான். தமிழிலும் விவசாயம் முதல் தகவல் தொழில்நுட்பம் வரை பல துறை சார்ந்து நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. ‘ஜந்து’ நாவல் அவ்வகைமையில் முக்கியமான உதாரணமாக நிற்கும். நானறிந்து பாராவுக்கு நான்கு துறைகளில் நிறைய அனுபவம் இருக்கிறது. ஒன்று பத்திரிகை, அடுத்து பதிப்பகம், அப்புறம் தொலைக்காட்சி நெடுந்தொடர், சமீப காலமாக...
மாலனின் ‘தோழி’ நாவல்
வாழ்வில் நாம் மிகவும் எதிர்பார்த்து ஏமாந்த சில சந்தர்ப்பங்கள் இருக்கும். எவ்வளவு காலமானாலும் அது மறக்காது. முதலில் ஏமாந்து, பிறகு அது கிடைத்துவிட்டாலுமே ஏமாந்த தருணம் நினைவில் எங்காவது உட்கார்ந்திருக்கும். எனக்கு அப்படிச் சில உண்டு. சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய பத்திரிகையில் விளம்பரம் ஒன்று வந்தது. ஒரு தொடருக்கான விளம்பரம். மாலன் எழுதுகிறார் என்றிருந்தது. இரண்டே சொற்களைக்...
தாராவின் காதலர்கள்
மனுஷ்யபுத்திரனின் ‘தாராவின் காதலர்கள்’ நாவல் வெளியீட்டு விழாவில் நான் பேசிய உரை கீழே.
ஒரு சிறிய சமூகத்தின் புனைபெயர்
தமிழ்ச் சூழலில் ஒரு சராசரி மனிதன் அறுபதாண்டுகள் நலமாக வாழ்வதற்கும் ஓர் எழுத்தாளன் வாழ்வதற்கும் வித்தியாசங்கள் உண்டு. அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலொழிய அந்தக் காலப் பரப்பைப் பெரிய சிக்கல்களின்றிக் கடப்பது சிரமம். ஜெயமோகன், சிக்கலின்றிக் கடந்தார் என்று சொல்ல முடியாது. அவருக்குப் பத்தாண்டுகள் சிறியவன் என்ற அளவிலேயே, அவர் மீது திணிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், அக்கப்போர்கள், திரிபுகள், காழ்ப்புகள்...
புத்தாண்டுத் தீர்மானங்கள்
பொதுவாக நிறையப் பேர் செய்வதும், பெரும்பாலும் யாரும் கடைப்பிடிக்க முடியாமல் கைவிடுவதுமாக ஒவ்வோர் ஆண்டும் நகைப்புக்கு இடமாவது, புத்தாண்டுத் தீர்மானங்கள். தீர்மானங்களைச் செயல்படுத்த முடியாமல் போவதற்கு முக்கியமான காரணம், குறிப்பிட்ட செயலைச் செய்வதற்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோமா, இல்லையா என்கிற தெளிவின்மையே. ஆரம்பித்துவிடலாம்; பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலையிலேயே பல தீர்மானங்களைச்...
மூத்த அகதி
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கை குறித்து நிறைய படிக்கிறோம்; கேள்விப்படுகிறோம். சில பலருடன் பழகவும் செய்கிறோம். என்றாவது அந்த வாழ்க்கையை, அதன் சிரமங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறோமா? குடியுரிமை பெற்று இன்னொரு தேசத்தில் வாழ்வது வேறு. அகதி வாழ்க்கை என்பது வேறு. அதிலும், நகரில் வாழும் அகதிகளின் வாழ்வும் முகாம்களில் வாழ்வோரின் வாழ்வும் வேறு. வாசு முருகவேலின் ‘மூத்த...
உறங்காத அலை
இந்தக் கதையை நான் இதுவரை சொன்னதில்லை. சொந்த சோகங்களைப் பொதுவில் வைக்கக்கூடாது என்ற கொள்கை காரணம். இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் இந்த சோகம் காலாவதியாகிவிட்டதனால்தான். நான் கல்கியில் வேலை பார்த்ததும் அங்கிருந்து குமுதம் சென்றதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் விலகிய சமயத்தில் உண்டான பிரச்னை மிகப் பெரிது. அந்த வயதின் அறியாமை, ஆத்திரம், விவரிக்க முடியாத கடுங்கோபம் எல்லாம் சேர்ந்து மூன்று மாத நோட்டீஸ்...
யதி – துறவின் அறியாத பக்கங்கள் (ஜார்ஜ் ஜோசப்)
ஒரு வாரமாக யதி நாவலில் மூழ்கியிருந்தேன். சன்னியாசிகள் குறித்து ஆயிரம் பக்கங்கள். சலிப்பே தராமல் அழைத்துச் சொல்கிறது எழுத்து. நாவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளும், ஒருவர் பின் ஒருவராக சந்நியாசி ஆகிவிடுகின்றனர். அவர்களைப் அப்பாதையில் செலுத்தியது என்ன? என்கிற முடிச்சை இறுதியில் தான் அவிழ்க்கிறார் பாரா. ஆனால், முன்பே அது எப்படி அவிழும் என்று கோடிட்டு காட்டிவிடுகிறார். முடிந்தால்...