Categoryபுத்தகம்

தூணிலும் இருப்பான் : நிழல் உலகின் நிஜ தரிசனம் (இரா. அரவிந்த்)

சமீப காலங்களில் பெரும்பாலும் எழும் பேச்சு, கருப்புப் பணத்தை மீட்டெடுத்துவிட்டால் ஏழ்மை ஒழிந்து நாடு சுபிக்ஷம் அடைந்து விடும் என்பது. குறிப்பாகத் தேர்தல் சமயங்களில் இக்கருத்துகள் பெரும் விவாதம் ஆகி ஏதோ ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணம் பூட்டி வைக்கப்பட்டது போலும், அவற்றைத் திறந்து விட்டால் உலகெங்கும் பாலாறும் தேனாறும் ஓடும் என்பது போன்றும் சொல்லப்படுவதைக் கேட்டு பலர் நம்பியும் இருப்பார்கள்...

கொம்பு முளைத்தவன் வாசிப்பனுபவம்

எழுத்தை நேசிக்கும் ஒருவனுக்கு, எழுத்தாளனை நேசிக்கும் ஒருவனுக்கு, எழுத்தை தனதாக்கிக்கொள்ள விரும்பும் ஆரம்ப நிலை எழுத்தாளனுக்கு… மிக சிறிய புத்தகம் என்றாலும் இந்தப் புத்தகத்தின் வழியாக பா.ராகவன் கற்றுக்கொடுக்கும் வழிமுறைகள் ஏராளம். நிச்சயம் இது எனக்கான புத்தகம், எனக்கான வழிகாட்டிகளில் ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை. ஒரு புத்தகம் தனக்கானது என வாசகன் உணரும்போதே அது வெற்றிபெற்று விடுகிறது...

தராத புத்தகங்கள்

நூல் வெளியானதும் அதன் ஆசிரியருக்குப் பதிப்பாளர் தரப்பில் இருந்து பத்து பிரதிகள் தருவார்கள். இதற்கு ‘ஆத்தர் காப்பி’ என்று பெயர். கொஞ்சம் குண்டு புத்தகமாக இருந்தால் ஐந்து பிரதிகள் வரும். உப்புமா கம்பெனி என்றால் ஐந்து, மூன்றாக மாறவும் வாய்ப்புண்டு. நூலாசிரியர்கள் தமக்கென்று சில பிரதிகள் வைத்துக்கொண்டு மிச்சத்தை நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் தருவார்கள். (சில வருடங்கள் கழித்து, என்...

அபாயகரம் – ஒரு மதிப்புரை [யுவகிருஷ்ணா]

ஒரு கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் எழுத முயற்சிப்பேன் என்று நேற்று இரவு 12 மணி வரை எனக்கேத் தெரியாது. சம்மந்தப்பட்ட கவிஞரே, “இது கவிதைத் தொகுப்பல்ல. கவிதை எழுத முயற்சி செய்த ஒருவனின் தோல்விச் சான்றுகள் மட்டுமே” என்று சுய வாக்குமூலம் கொடுக்கும்போது, கவிதை அறியா கழுதையான நான் ஏன் எழுதக்கூடாது என்கிற தன்னம்பிக்கை ஏற்பட்டது. ‘அபாயகரம்’ என்கிற தலைப்புதான் அச்சுறுத்துகிறதே தவிர, தொகுப்பில்...

அலமாரி இதழ் பேட்டி

அலமாரி, ஜனவரி 2019 இதழில் வெளியாகியுள்ள எனது பேட்டி: ஏன் திடீரென்று புனைவின் பக்கம் ஒதுங்கிவிட்டீர்கள்? எழுத ஆரம்பித்தது முதல் இன்றுவரை புனைவு மட்டுமே என் ஆர்வமாக இருக்கிறது. ராவ் குமுதத்தின் ஆசிரியராக இருந்தபோது முதல் முதலில் பாகிஸ்தானின் அரசியல் வரலாறை எழுதச் சொல்லி என்னை அந்தப் பக்கம் இழுத்துவிட்டார். அந்தத் தொடரின் எதிர்பாராத பெரும் வெற்றி, அடுத்தப் பத்தாண்டுகளுக்கு என்னை அரசியல் வரலாறுகளையே...

பூனைக்கதை குறித்து ‘வாசகசாலை’ கார்த்திகேயன்

காலத்தைக் கடந்து வாழும் ஒரு மாயப் பூனையின் கண்கள் வழியே கலைஞர்களையும் படைப்புகளையும் அவர்களின் சூழலையும் பேசும் ஒரு உலகத்தை, வாசகர்களின் கண்முன்னே விரிவடையச் செய்கிறது இந்த “பூனைக்கதை” நாவல். வரலாற்றின் முந்தைய அத்தியாயங்களில் ஒரு காலத்தில் வாழ்ந்த கலைஞர்களை, அவர்கள் விரும்பும் கலையின் பொருட்டு அவர்கள் வாழ நேர்ந்த சூழலை,பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவிலும் அவர்களை உயிர்ப்போடு...

பினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா

யதி நாவலை வெளியிடும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ஆர்ட் செண்டரில் நடைபெறவிருக்கிறது. நாகூர் ரூமி, சுதாகர் கஸ்தூரி, ஹாலாஸ்யன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன். வாய்ப்புள்ளோர் வருக. பினாக்கிள் வெளியீடுகள் அரங்கில் 20 சதத் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

மாலுமி – முன்னுரை

கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஜனவரி மாதத்திலும் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகளை எப்படியாவது எழுதிவிடுகிறேன். வருடம் முழுவதும் என்னென்னவோ எழுத வேண்டி இருக்கிறது. ஆயிரக்கணக்கான தொலைக்காட்சித் தொடர் காட்சிகளுக்கான வசனங்கள், நாவல் முயற்சிகள், பத்திரிகைத் தொடர்கள், கட்டுரைகள், சிறு குறிப்புகள் இன்னும் என்னென்னவோ. ஒரு சிறுகதை எழுதுவதற்கான மன ஒருங்கமைவும் நேரமும் பெரும்பாலும் கூடுவதில்லை. ஆனால் ஒரு நல்ல...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter