கிண்டில் குறித்தும் அதில் மின் நூல்களை வாங்கிப் படிப்பது குறித்தும் நான் எப்போது எழுதினாலும் குறைந்தது பத்து சந்தேகங்கள் நண்பர்களிடம் இருந்து வருகின்றன. என்னால் முடிந்தவரை அவற்றை இங்கு தீர்க்கப் பார்க்கிறேன்.
நகையலங்காரம்
எனது நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பு, ‘நகையலங்காரம்’ என்ற பெயரில் இன்று கிண்டில் மின் நூலாக வெளியாகியிருக்கிறது. மொத்தம் 26 கட்டுரைகள்.
பத்திரிகைகளில் எழுதியவை, இணையத்தில் எழுதியவை, சொந்த இஷ்டத்துக்கு எழுதி எங்கும் பிரசுரிக்காதவை என்று இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவிதம். அனைத்துக்கும் பொதுவான ஒரே அம்சம், நகைச்சுவை.
ராயல்டி விவகாரம்
ராயல்டி என்பது என்னவென்றே புரியாமல் இளையராஜா விவகாரத்தில் பலபேர் பொங்குவதைக் காண்கிறேன். பாமர ரசிகனுக்கு இந்த காப்பிரைட், ராயல்டியெல்லாம் சம்பந்தமில்லாதவைதான். ஆனால் கருத்துச் சொல்ல வரும்போது மட்டும் எப்படியோ ஒரு சம்பந்தம் நேர்ந்துவிடுவது கருவின் குற்றமல்ல. காலத்தின் குற்றம்.
NTFS-3G பிரச்னை
இரண்டாண்டுகளுக்கு முன்னால் விண்டோஸைத் தலைமுழுகிவிட்டு ஆப்பிள் கணினிக்கு மாறியபோது எனக்குப் பெரிய பிரச்னையாக இருந்த ஒரே விஷயம், என் பாகவதர் காலத்து ஹார்ட் டிரைவ்களை எப்படி இதன் சின்னவீடாக செட்டப் செய்வது என்பதுதான். என் மாக்குப் புத்தகக் காற்று ஏற்கும் நவீன அடைசல் டப்பாக்களைப் புதிதாக வாங்குவது எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால் என் பழைய டப்பாக்களுக்குள் இருப்பதை கணினிக்குள் கடத்துவது எப்படி...
மின் நூலாக ரெண்டு
குங்குமம் வார இதழில் தொடராக வெளி வந்த இக்கதையை இப்போது FreeTamileBooks.com மூலம் இலவச மின் நூலாக வெளியிடுகிறேன். கதை படிக்க நன்றாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்த மின் நூலை நானே என் சொந்த முயற்சியில் உருவாக்கியிருக்கிறேன் என்பதுதான் இப்போதைக்கு என்னைக் கிறுகிறுக்க வைக்கும் சங்கதி. ஐபுக் எடிட்டர், கேலிபர், ப்ரெஸ்புக் என்று தொடங்கி சமூகத்தில் புழக்கத்தில் உள்ள அனைத்து விதமான மின் நூல்...
சாந்தி முகூர்த்தம்
சில தினங்களுக்கு முன்பு ஆப்பிள் வெளியிட்ட புதிய இயங்குதளமான Yosemiteக்கும் நேற்றிரவு வெளியான iOS 8.1க்கும் என் பிரதியில் நல்லபடியாக சாந்தி முகூர்த்தம் நடத்தி வைத்தேன். ஓர் இயங்குத் தளம் இத்தனை வியப்பளிக்குமா, வசீகரிக்குமா என்று இன்னமும் நம்ப முடியவில்லை. இதற்குமேல் தொழில்நுட்பத்தில் என்ன இருந்துவிடப் போகிறது என்று சென்றமுறை தோன்றியது போலவேதான் இப்போதும் தோன்றியது. இப்போது என் கருவிகளின்...
கொட்டிய குப்பையும் கொட்டப்போகும் குப்பையும்
இட்லிவடைக்கு இன்று பிறந்தநாள் என்று அறிந்தேன். வாழ்த்துகள். இணையத்தில் அநாமதேயம் என்பதன் சுவாரசியம் மறைந்து வெகுநாள் ஆகிவிட்டது. யாராயிருந்தால் என்ன, சரக்கு எப்படி என்கிற மனநிலைக்கு வாசகர்கள் பழகிவிட்டார்கள். இட்லிவடை யார் என்ற கேள்வி இன்று பெரும்பாலும் எழுவதில்லை. இட்லிவடைக்குப் பிறகு உதித்த பேயோன், தனது முன்னோர்களின் அனைத்து அருமை பெருமைகளையும் அடித்துக்கொண்டு போய்விட்டார். அவரது பாதிப்பில்...
இது நான் எழுதியதல்ல.
எனக்கு இரண்டு தம்பிகள் உள்ளார்கள். அவர்களுக்கு எழுதும் பழக்கமெல்லாம் எனக்குத் தெரிந்து கிடையாது. திடீரென்று இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு பிடிஎஃப் கோப்பு எனக்கு மிகுந்த வியப்பளித்தது. என்னுடைய இரண்டாவது தம்பி ஜகந்நாதன் அதனை அனுப்பியிருந்தான். தனது அலுவலக நண்பர்களுக்கு அனுப்பிய கடிதம் என்று குறிப்பிட்டிருந்தான். முதல் முறையாகத் தமிழில். கூகுள் டிரான்ஸ்லிட்ரேஷனில் இதனை முயற்சி செய்ததாகவும்...