இந்தக் குறிப்பு எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் மட்டுமானது. மற்றவர்கள் கடந்துவிடலாம். தமிழ்நாட்டில் எத்தனை பதிப்பகங்கள் உண்டோ, அத்தனை எழுத்துருக்களும் உண்டு. ஒவ்வொரு பதிப்பகமும் ஒவ்வொரு விதமான எழுத்துரு / என்கோடிங்கில் இவ்வளவு காலம் புத்தகங்களை அச்சிட்டு வந்திருக்கின்றன. இதில் மென்பொருள் என்றே சொல்ல முடியாத வன்னெழுத்துருக்களும் சேர்த்தி. (key உள்ள எழுத்துரு ஒன்றை நானே...
இந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன?
இத்தொகுப்பில் உள்ள கதைகளை அதிகபட்சம் நாற்பது நாள் இடைவெளியில் எழுதினேன். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், தினம் தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் செய்திகளில் பார்த்துப் பார்த்துக் கிட்டத்தட்ட மனச்சோர்வு எல்லைக்குச் சென்றுவிடுவேன் என்று தோன்றியது. வலுக்கட்டாயமாக அதில் இருந்து என்னைப் பிடுங்கிக்கொள்ளவே வழக்கத்தைவிட நிறைய எழுதத் தொடங்கினேன். ஆதியிலே...
கிருமி
விடிந்து எழுந்ததில் இருந்தே தலை வலித்தது. குனிந்தால் மூக்கில் ஒழுகியது. காதுகளுக்குள் சூடு தெரிந்தது. எப்படியும் சுரம் வரும் என்று தோன்றியது. விபரீதமாக ஏதாவது உருக்கொள்வதற்கு முன்னால் டாக்டரைப் பார்த்துவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அதற்கும் பயமாக இருந்தது. ஊர் இருக்கும் நிலைமையில் எந்த மருத்துவரும் இப்போது பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்லத் தயங்குவார்கள். பரிசோதனைகளுக்கு எழுதித் தரலாம். ஒரு...
விருட்சம் பேட்டி
விருட்சம் 112வது இதழில் (மார்ச் 2020) வெளியாகியுள்ள எனது பேட்டி இது. அழகியசிங்கர் யதி வாசித்து முடித்ததன் விளைவு எனக் கொள்ளலாம். எழுத வேண்டுமென்று எப்போது தோன்றியது? அந்தச் சமயத்தில் உங்கள் வயதென்ன? ஆறாம் வகுப்பில் இருந்தபோது குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் சிறுவர் பாடல்களால் ஈர்க்கப்பட்டு எழுத ஆரம்பித்தேன். அவரது சந்தங்களை அடியொற்றியே எழுதினேன். அவரே அவற்றை கோகுலத்திலும் பிரசுரம்...
இது வேறு அது வேறு.
சார் வணக்கம். தயக்கத்துடன் இதைக் கேட்கிறேன். உங்களின் அருமையான அரசியல் வரலாற்று நூல் நிலமெல்லாம் ரத்தத்தையே இலவசமாகக் கொடுத்தீர்களே. யதி, இறவானுக்கு மட்டும் ஏன் தடை? (என் பெயரை வெளியிட்டுவிட வேண்டாம்.) இது சற்று நீண்ட விளக்கம் கோரும் வினா. சரி பரவாயில்லை. அடிப்படையில் நான் கதாசிரியன். என் பிரத்தியேக விருப்பத்துக்காக மட்டும் நாவல்கள் எழுதுபவன். வாசகர்களுக்கும் அவை பிடித்துப் போனால் மகிழ்ச்சி...
Pen to Publish 2019 – போட்டி அறிவிப்பு
நண்பர்களுக்கு வணக்கம். Amazon Pen to Publish திட்டத்துக்கு இது மூன்றாவது வருடம். எழுத்தாளர்கள், எழுதுபவர்கள், எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் நடத்தப்படும் இப்போட்டியில் இம்முறை தமிழுக்கான தேர்வுக் குழுவில் நானும் நண்பர் சரவண கார்த்திகேயனும் இருக்கிறோம். தேர்வு செய்வதெல்லாம் பிற்பாடு நடப்பது. இப்போட்டியில்...
மாலுமி – முன்னுரை
கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஜனவரி மாதத்திலும் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகளை எப்படியாவது எழுதிவிடுகிறேன். வருடம் முழுவதும் என்னென்னவோ எழுத வேண்டி இருக்கிறது. ஆயிரக்கணக்கான தொலைக்காட்சித் தொடர் காட்சிகளுக்கான வசனங்கள், நாவல் முயற்சிகள், பத்திரிகைத் தொடர்கள், கட்டுரைகள், சிறு குறிப்புகள் இன்னும் என்னென்னவோ. ஒரு சிறுகதை எழுதுவதற்கான மன ஒருங்கமைவும் நேரமும் பெரும்பாலும் கூடுவதில்லை. ஆனால் ஒரு நல்ல...
ஆதிவராகம் [சிறுகதை]
அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்படியே சில நூறடிகள் தள்ளி மணல் மேடிட்டிருக்கும். மணல் மேட்டின்மீது பையன்கள் முட்டிவரை நிஜாரை இறக்கி விட்டுக்கொண்டு மலம் கழித்துக்கொண்டிருப்பார்கள். மறு பக்கம் குளம்போல் கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருக்கும். ஓடும் நீரும் இந்த நீரும் வேறு வேறு...