சென்னைவாழ் வாசக வைடூரிய வண்டுகள் கவனத்துக்கு. மனுஷ்யபுத்திரன் வெளியிட்ட அறிவிப்பைப் பார்த்திருப்பீர்கள். நாளை சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழு நடத்தும் உலகப் புத்தக தின விழாவில் கலந்துகொண்டு பேசுகிறேன். இடம்: அண்ணாசாலை தேவநேயப் பாவாணர் நூலக வளாகம். நேரம் மதியம் 2 மணி. ஓய்வு நாள்-கொளுத்தும் வெயில்-மதிய உணவுக்குப் பிறகு உடனே என்கிற முப்பெரும் தடைகளைத் தகர்த்தெறிய திராணியுள்ள அனைவரையும் அன்புடன்...
ஒலிப் புத்தகம்
என்னுடைய புத்தகங்கள் ஸ்டோரி டெல் நிறுவனத்தின் மூலமாக இனி ஒலிப் புத்தகங்களாகவும் (audio books) கிடைக்கும். முதல் நூலாக இறவான், பிப்ரவரி 14 அன்று வெளியாகிறது. அன்றே வேறு சில புத்தகங்களும் வெளியாகும் என்று நினைக்கிறேன். இது குறித்து ஸ்டோரி டெல் நிறுவனம் என்னிடம் விரிவான நேர்காணல் ஒன்றை நடத்தியது. அது வெளியானதும் லிங்க் தருகிறேன்.
ஸ்டோரி டெல்லில் என் ஒலிப் புத்தகங்கள் சேரும் பக்கம் இங்கே உள்ளது.
கையொப்பமுடன் புத்தகங்கள்
சென்னை புத்தகக் காட்சி 2022, கோவிட் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அநேகமாக மார்ச் மாதத்துக்குப் பிறகு அது நடக்கலாம் என்று இப்போதைக்குச் சொல்கிறார்கள். என்ன ஆகும் என்று கணிப்பதற்கில்லை. புத்தகக் காட்சி என்பது என்னைப் பொறுத்தவரை வாசகர்களையும் நண்பர்களையும் சந்திப்பதற்கான திருவிழா. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நான் என் கூட்டை விட்டு வெளியே வருகிறேன். பிற இலக்கியக்...
யதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு
இதனைப் போட்டி என்று குறிப்பிடச் சிறிது தயக்கமாக உள்ளது. ஒரு சிறிய பரிசோதனை முயற்சி. தினமணி இணையத் தளத்தில் நான் எழுதி வரும் ‘யதி’ நவம்பரில் நிறைவடைகிறது. ஜனவரி சென்னை புத்தகக் காட்சியில் அது புத்தகமாக வரும். அத்தியாயங்களை நீங்கள் மொத்தமாக தினமணி தளத்தில் வாசிக்கலாம். யதி, முழுவதும் இங்கே சேமிக்கப்படுகிறது: இது புத்தகமாக வரும்போது யாரையாவது முன்னுரை எழுதச் சொல்லலாம் என்று தோன்றியது...
புதிய புத்தகங்கள் – முன் வெளியீட்டுத் திட்டம்
ஜனவரி 2018 சென்னை புத்தகக் காட்சியில் என்னுடைய மூன்று நூல்களை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. 1. பூனைக்கதை – புதிய நாவல் 2. ருசியியல் – தி இந்துவில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு 3. சிமிழ்க்கடல் – பூனைக்கதைக்கு முன்பு நான் எழுதிய எட்டு நாவல்களின் பெருந்தொகுப்பு. இந்த மூன்று நூல்களின் மொத்த விலை ரூ. 1500. இதற்கு கிழக்கு முன் வெளியீட்டுத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. டிசம்பர்...
154 கிலோபைட்
154 கிலோ பைட் – என்னுடைய முதல் கட்டுரைத் தொகுப்பு. 2002ல் வெளி வந்தது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறு பதிப்பாக மின் நூல் வடிவில் வெளியாகியிருக்கிறது. இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் பார்த்தவர்கள் / வாசித்தவர்கள் குறைவாகவே இருப்பார்கள். ஒரே ஒரு பதிப்பு மட்டும் வெளிவந்தது. அதிலும் பெரும்பாலான பிரதிகளைப் பதிப்பாளர் எடைக்குப் போட்டுவிட்டு கடையைக்...
நகையலங்காரம்
எனது நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பு, ‘நகையலங்காரம்’ என்ற பெயரில் இன்று கிண்டில் மின் நூலாக வெளியாகியிருக்கிறது. மொத்தம் 26 கட்டுரைகள்.
பத்திரிகைகளில் எழுதியவை, இணையத்தில் எழுதியவை, சொந்த இஷ்டத்துக்கு எழுதி எங்கும் பிரசுரிக்காதவை என்று இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவிதம். அனைத்துக்கும் பொதுவான ஒரே அம்சம், நகைச்சுவை.